`உண்மைனு நிரூபிங்க; நான் பா.ஜ.க-வில் சேர்ந்துடுறேன்!’ - ட்விட்டரில் கலகலத்த உதயநிதி | If u can prove that I am a trustee in DMKs trust.. I will join BJP says udhayanithi

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (24/01/2019)

கடைசி தொடர்பு:17:41 (24/01/2019)

`உண்மைனு நிரூபிங்க; நான் பா.ஜ.க-வில் சேர்ந்துடுறேன்!’ - ட்விட்டரில் கலகலத்த உதயநிதி

தமிழக பா.ஜ.க-வின் இளைஞர் அணியைச் சேர்ந்த எஸ்.ஜி சூர்யா என்பவர் வாரிசு அரசியல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ``தி.மு.க ஆதரவாளர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா, ஸ்டாலின், கனிமொழியின் வாரிசு அரசியலை மறைக்கிறார்கள். இவர்கள் வரிசையில் தமிழிசை சேரவில்லை. அவர் வேறு பாதையை தேர்ந்தெடுத்து பா.ஜ.க-வில் இணைந்தார். ஆனால், தி.மு.க, காங்கிரஸ் தலைமை வாரிசு நிறுவனமாகியுள்ளது. 

உதயநிதி

அக்கட்சிகள் ஒரு கம்பெனி" என்று குறிப்பிட்டதுடன், ``பா.ஜ.க-வில் வாரிசு அரசியல் இருந்தாலும் அவர்கள் எல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ-க்களாகவே இருக்கிறார்கள். தி.மு.க, காங்கிரஸ் போன்று மொத்த கட்சியையும் கட்டுப்படுத்தும் தலைவர்களாக வரவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் கட்டுப்படுத்தும் தி.மு.க. அறக்கட்டளைக்கு உதயநிதி அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை நியாயப்படுத்தும் மக்களுக்கு இது புதியது" என்று பதிவிட்டிருந்தார்.

உதயநிதி

இவரின் பதிவை டேக் செய்து, உதயநிதி பதிலளித்தார். அதில், ``நான் தி.மு.க டிரஸ்ட்டில் அறங்காவலராக இருப்பதை நிரூபித்தால் நான் பா.ஜ.க-வில்  சேர்ந்துவிடுகிறேன். அதுதான் மிக மோசமான தண்டனையாக இருக்கும்" எனக் கலாய்த்துப் பதிவிட்டுள்ளார். இவர்களின் பதிவு தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க