சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் - முதற்கட்டமாக ரோபோவை அனுப்பும் இஸ்ரோ! | Isro sivathanu pillai press meet in nagercoil

வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (25/01/2019)

கடைசி தொடர்பு:07:37 (25/01/2019)

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் - முதற்கட்டமாக ரோபோவை அனுப்பும் இஸ்ரோ!

சந்திரனில் மனிதனை அனுப்பும் முயற்சியின் முதற்கட்டமாகச் சந்திரனில் இருந்து ஹீலியம் வாயு கொண்டுவர இந்த ஆண்டு ரோபா ஒன்றைச் சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது என பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தெரிவித்தார்.

சிவதாணுபிள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ``உலக நாடுகளின் பட்டியலில் விண்வெளிக்கு ராக்கெட் ஏவுவதில் இந்தியா இன்று 4-வது இடத்தில் உள்ளது. தற்போது சந்திரனில் மனிதனை அனுப்புவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் முயற்சியாக விரைவில் ரோபா ஒன்று சந்திரனுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது நடைபெற்றுவரும் ஆய்வில் சந்திரனில் ஹீலியம் வாய்வு அதிகமாகக் காணப்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்ரோ

இது அரிய வகை மூலப் பொருள் ஆகும். ஒரு கிராம் ஹீலியம் வாயு 1000 யுரோனியத்துக்கு சமமானதாகும். ஹீலியம் கதிர்வீச்சற்றது என்பதால், அது பாதுகாப்பானதாகும். சந்திரனிலிருந்து ஹீலியம் வாயு கொண்டுவர இந்த ஆண்டு ரோபா ஒன்றைச் சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது. அதன் பின்பு மனிதனைச் சந்திரனுக்கு அனுப்புவதில் ரஷ்யாவும் நம்மோடு பங்குபெற உள்ளது. நம்மால் உருவாக்கப்பட்ட ப்ரோமஸ் ஏவுகணை  உலகிலேயே அதிகம் வேகம் கொண்டது. தற்போது அதைவிட ஏழு மடங்கு வேகம் கொண்ட, மணிக்கு 7,000 கிலோ மீட்டர் வேகம் கொண்ட ஏவுகணை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அந்தவகையில் இந்தியா செயற்கைக்கோள் செலுத்துவதில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது" என்றார்.