நீண்ட நாள்களாகப் பயன்பாட்டில் இல்லாத காரை இயக்கிய மர்ம நபர் -விபத்தில் சிக்கிய தொழிலாளி படுகாயம் | A man tried to drive unused car met with accident

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (25/01/2019)

கடைசி தொடர்பு:08:03 (25/01/2019)

நீண்ட நாள்களாகப் பயன்பாட்டில் இல்லாத காரை இயக்கிய மர்ம நபர் -விபத்தில் சிக்கிய தொழிலாளி படுகாயம்

நீண்ட நாள்களாகப் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர் ஒருவர் இயக்கியதில் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் வந்த ஒருவர் படுகாயமடைந்தார். 

மர்ம நபர்  இயக்கியதில் விபத்துக்குள்ளான கார்

கரூர் நகரின் மையத்தில் இருக்கிறது பிரசித்தி பெற்ற ஈஸ்வரன்கோயில். அந்தக் கோயிலுக்குப் பின்புறம் நெடுநாள்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர் ஒருவர் இயக்கினார். அப்போது கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக ஓடிய கார், நடைபாதை மீது ஏறி இருசக்கர வாகனத்தில் மீது மோதி அருகே இருந்த மின்கம்பத்தில் இடித்து நின்றது. இதில் இரு சக்கர வாகனம் காரின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவன தொழிலாளி எலவனூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன், செந்தில் என்பவர் எதிர்பாராதவிதமாக வாகனத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

விபத்து நடைபெற்ற பகுதி

அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அவசர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய கார் ஓட்டுநரைக் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மக்கள் நெரிசல் மிகுந்த ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரை தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.