‘லட்ச ரூபாய் சம்பளம் போதவில்லையா?’ -அரசு ஊழியர்களை கேள்விகேட்ட பூவியாபாரி | A flower seller opposed teachers protest

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (25/01/2019)

கடைசி தொடர்பு:14:35 (25/01/2019)

‘லட்ச ரூபாய் சம்பளம் போதவில்லையா?’ -அரசு ஊழியர்களை கேள்விகேட்ட பூவியாபாரி

 
போராட்டம்
 
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்திட வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் உடனடியாக இணைப்பதன் மூலம் தொடக்கக் கல்விக்கு மூடு விழா நடத்துவதையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 
 
பல்வேறு கட்டமாக போராடி வரும் அரசு ஊழியர்களை அரசுப் பணிக்கு திரும்பும்படி வலியுறுத்தியும், புதிய பணியாளர்களை பணியில் சேர்ப்பதற்கு தற்காலிக ஆணைகள் பிறப்பித்துள்ளது. இந்த பரபரப்புகளால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 
அரசு ஊழியர்கள்
 
அரசு ஊழியர்களின் இந்தப் போராட்டத்துக்கு எதிராக பொதுமக்களும், சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று காலையிலிருந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் சிலர் போராட்ட களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். அந்த மாணவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.
ஜாக்டோ - ஜியோ
 
இப்படியான சூழலில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின்  2,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களைப் பார்த்து திருச்சியைச் சேர்ந்த வியாபாரியான வெள்ளைக்கண்ணு மகன் சிவக்குமார் என்பவர் சில கருத்துகளைச் சொல்ல அப்பகுதி பரபரப்பானது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் பூவியாபாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அங்கிருந்த போலீஸார் சிவகுமாரை குண்டுக்கட்டாக தூக்க முற்பட்டனர். அப்போது பூவியாபாரி சிவகுமாரின் சட்டை கிழிந்துவிட கடுப்பான சிவகுமார் தனது ஆடைகளை கழற்றி வீசி விட்டு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க சிவக்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
 
திருச்சி
இந்நிலையில், பூவியாபாரியான சிவக்குமார், ஆசிரியர்களைப் பார்த்து, `நீங்கள் எல்லாம் ஒழுங்கா பாடம் நடத்துனா நாங்க ஏன் தனியார் பள்ளியில் போய் பிள்ளைகளைச் சேர்க்கும் நிலைமை வந்திருக்கும். இதுல சம்பளம் பத்துலனு போராட்டம் வேற பண்ணுறீங்க எனக் கேட்டதாகவும், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது  என்றும், தன்னை அகற்றிய போலீஸாரிடம் பூவியாபாரி சிவக்குமார், லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், சம்பளம் பத்தலைன்னு போராட்டம் நடத்துவாங்க. நீங்க அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறீங்களே! அவர்களை அப்புறப்படுத்தாமல் தன்னை அப்புறப்படுத்தியது தவறு என தனது ஆடைகளை துறந்து நிர்வாணமாக சென்றதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்களின் போராட்டத்தாலும், பூ வியாபாரி சிவக்குமாரின் எதிர்ப்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க