"நடிகர் சங்க செயற்குழு பதவிக்குப் போட்டியிடுகிறேன்..!" - 'ராஜாராணி' ஶ்ரீதேவி | serial actress sridevi compete in serial election

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (25/01/2019)

கடைசி தொடர்பு:15:30 (25/01/2019)

"நடிகர் சங்க செயற்குழு பதவிக்குப் போட்டியிடுகிறேன்..!" - 'ராஜாராணி' ஶ்ரீதேவி

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. நான்கு குழுக்களாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். இதில், 'உழைக்கும் கரங்கள்' அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காகப் போட்டியிடுகிறார், ஶ்ரீதேவி. இவர், தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் 'ராஜாராணி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

ஶ்ரீதேவி

''ரவிவர்மா சாருடைய டீமில் போட்டிபோடுறேன். எனக்கு பர்சனலா ரவிவர்மா சாரை ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அவர் இதுக்கு முன்னாடியும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் போட்டி போட்டிருக்கார். ஆனா, ஜெயிச்சது இல்ல. அவர் ஜெயிக்கலைனாலும் எல்லா மீட்டிங்கிற்கும் போவார். யாராவது உதவிக்காகக் காத்திருக்காங்கன்னு தெரிஞ்சா, அவரால முடிஞ்ச உதவிகளைச் செய்வார். நான் சொல்லி நிறையப் பேருக்கு படிப்பிற்காக உதவிகள் பண்ணியிருக்கார்.

மருத்துவ உதவிகள் செஞ்சிருக்கார். முதல்ல எனக்கு வேற போஸ்டிங் தான் கொடுத்தாங்க. எனக்கு அந்த அளவுக்கு அனுபவம் இல்லைங்கிறதுனால, நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். 'கமிட்டி மெம்பர் போஸ்டிங்கிற்காவது நீ நிக்கிற அவ்வளவுதான்'னு சொல்லிட்டாங்க. இப்போ கொஞ்சம் கொஞ்சமா எல்லா விஷயங்களும் கேட்டு பண்ணிட்டு இருக்கேன். சார் வந்துட்டாங்கன்னா, நிச்சயம் நிறைய நல்ல விஷயங்கள் பண்ணுவாரு. அவர்கிட்ட நிறைய பிளான் இருக்கு. நிச்சயம் அவர் ஜெயிப்பார்னு நாங்க நம்பறோம். வெயிட்டிங்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க