`அவர்கள் நோட்டாவோடுதான் போட்டியிடப்போகிறார்கள்!’ - பா.ஜ.கவை விமர்சிக்கும் கி.வீரமணி | K Veeramani slams BJP

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (25/01/2019)

கடைசி தொடர்பு:18:15 (25/01/2019)

`அவர்கள் நோட்டாவோடுதான் போட்டியிடப்போகிறார்கள்!’ - பா.ஜ.கவை விமர்சிக்கும் கி.வீரமணி

`தமிழகத்தில் நோயைக் கண்டு ஓடுவதுபோல். பா.ஜ.க-வை பார்த்து அரசியல் கட்சியினர் ஓடுகின்றனர். பா.ஜ.க அரசியல் கட்சிகளோடு போட்டியிடவில்லை; நோட்டோவோடு மட்டுமே போட்டியிடப்போடுகிறார்கள்’ என்று பி.ஜே.பி-யைக் கடுமையாக விமர்சனம் செய்தார் கி.வீரமணி

                                                    கி.வீரமணி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திராவிடர் கழகத் தொண்டரின் திருமணத்துக்கு வந்த அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதும் ஆட்சிகள் சிறப்பான முறையில் தொடரக் கூடியதாக இருந்தால் மட்டுமே நிலையான முதலீடுகள் வரும். ஆனால், இங்கு நடந்துகொண்டிருக்கும் ஆட்சியைப் பற்றிதான் உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. இதற்கு முன் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டது.

                                                          கி.வீரமணி

இளைஞர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை மட்டுமே. ஊழல் இல்லாத அரசாங்கம் இருந்தால்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு நீடிக்க முடியும் அதற்குக் கூடிய வாய்ப்புகள் சூழல் உருவாக வேண்டும் இந்த ஆட்சியில் ஊழல் இல்லாத அரசாங்கமாகச் செயல்படுமா சொல்லுங்கள்’’ என்றார். 

                                                  

அ.தி.மு.க கூட்டணி குறித்து குழு அமைத்துள்ளதே என்று கேட்டபோது, ``முதலில் அவர்களுக்குள்ளே கூட்டணி குறித்து பல்வேறு முரணான கருத்துகள் எழுந்துகொண்டிருக்கிறது. கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலவிதங்களில் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். பா.ஜ.க-வுடன் தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்க எந்தக் கட்சியும் விரும்பவில்லை எத்தனை மோடி, எத்தனை அமைச்சர்கள் வந்தாலும் பா.ஜ.க-வுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள்.

                                                                   கி.வீரமணி

பி.ஜே.பி-யைப் பார்த்து நோயைப் பார்த்தவர்கள்போல் தெறித்து ஓடுகின்றனர். பா.ஜ.க அரசியல் கட்சிகளோடு போட்டியிடவில்லை நோட்டோவோடு மட்டுமே போட்டியிடப்போடுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கான நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும். இதில், தேவையில்லாமல் தமிழக அரசு கௌரவம் பார்க்கக் கூடாது போராட்டத்தில் ஈடுபடுவோரைச் சிறையில் அடைப்பது, அவர்களை மிரட்டுவது கூடாது. தேர்வு சமயமாக உள்ளதால் மாணவர்களின் கல்வித் பாதிக்கப்படாத வகையில் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்’’ என முடித்துக்கொண்டார்.