`ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்யுங்கள்' - தீப்பந்தம் ஏந்திப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர்! | protest against hydro carbon project

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (25/01/2019)

கடைசி தொடர்பு:22:15 (25/01/2019)

`ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்யுங்கள்' - தீப்பந்தம் ஏந்திப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்யக்கோரி, திருக்காரவாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் நடத்தினர். 

கம்யூனிஸ்ட்

மத்திய அரசு, திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி, நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்தப் பகுதியைச் சுற்றிலும் அதிக அளவில் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்துள்ளனர். இப்பகுதியில் இத்திட்டத்தை அனுமதிப்பதன்மூலம் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமில்லாமல், லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்திவருகின்றனர். 

கம்யூனிஸ்ட்

இந்தப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும், பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக திருக்காரவாசலில் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அந்த வகையில் இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கைகளில் தீப்பந்தம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.