திருமண ஆசைகாட்டி 9-ம் வகுப்பு மாணவி கடத்தல்! - வத்தலக்குண்டு இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது | Man arrested in Pocso act over kidnapping 9th class student

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (25/01/2019)

கடைசி தொடர்பு:21:45 (25/01/2019)

திருமண ஆசைகாட்டி 9-ம் வகுப்பு மாணவி கடத்தல்! - வத்தலக்குண்டு இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

ஆண்டிபட்டி அருகே திருமண ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியைக் கடத்திய வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

நாராயணன்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர் கடத்திச் சென்றதாக வந்த புகாரை அடுத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வத்தலக்குண்டைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் நாராயணன் (வயது 32). டெய்லரிங் வேலை செய்யும் நாராயணன், பொங்கல் விடுமுறைக்கு ஆண்டிபட்டிக்கு வந்துள்ளார். அப்போது அச்சிறுமியுடன் பழகி, அவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி வத்தலக்குண்டுக்கு கடத்திச் சென்றுள்ளார். இதுதொடர்பாக, சிறுமியின் தந்தை ராஜதானி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆய்வாளர் முத்துமணி தலைமையிலான போலீஸார் வத்தலக்குண்டுக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞர் நாராயணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.