பிரதமர் மோடி வருகை - மதுரையில் 2 மணி நேரம் விமான சேவை நிறுத்தம்! | Flight services in madurai airport will stop for 2 hours over PM Modi's visit

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (25/01/2019)

கடைசி தொடர்பு:23:30 (25/01/2019)

பிரதமர் மோடி வருகை - மதுரையில் 2 மணி நேரம் விமான சேவை நிறுத்தம்!

பிரதமர் நரேந்திர மோடி வருகையை அடுத்து மதுரை விமான நிலையத்தில் 2 மணி நேரம் விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மதுரை விமான நிலையம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ளவும்  பி.ஜே.பி-யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் வருகை தர உள்ளார். பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவதற்கு பல்வேறு இயக்கங்களும் தயாராகி வருகின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை விமான நிலையத்துக்கு காலை 11.30 மணிக்கு வரும் பிரதமர் பிற்பகல் 1.30 மணிக்கு நிகழ்ச்சிகளை நிறைவு செய்துகொண்டு கொச்சி புறப்படுகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதாலும், விழா மேடை பகுதியில் விமானப் போக்குவரத்து நடைபெறுவதாலும் பாதுகாப்புக் கருதி விமானப் போக்குவரத்துக்கு பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

மதுரை விமான நிலையம்

காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மதுரை விமான நிலையத்தில் எந்தவொரு விமான போக்குவரத்தும் நடைபெறாது. சேவை நிறுத்தி வைக்கப்பட்ட நேரத்தில் வரக்கூடிய விமானங்கள் நேரத்தை விமான நிலைய அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர். இதுகுறித்து விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி, மின்அஞ்சல் மூலமும் தகவல் தெரிவித்து வருகிறார்கள்.