பெண்குழந்தைகள் பாதுகாப்பு;திருவண்ணாமலை மாவட்டத்துக்கு விருது - அசத்திய கலெக்டர்! | Tiruvannamalai collector receives award for creating awareness on girl children protection

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (26/01/2019)

கடைசி தொடர்பு:06:30 (26/01/2019)

பெண்குழந்தைகள் பாதுகாப்பு;திருவண்ணாமலை மாவட்டத்துக்கு விருது - அசத்திய கலெக்டர்!

பெண் குழந்தைகளின் அடிப்படை நலன், முன்னேற்றம், கல்வி, சுகாதாரம், பாலியல் குறித்த விழிப்பு உணர்வு போன்றவற்றில் தனி கவனம் செலுத்தி, பெண் குழந்தைகள் நலனுக்கான பல திட்டங்களை நிறைவேற்றியதற்காக தேசிய அளவிலான விருதை பெற்றுள்ளார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தியதில் தேசிய அளவில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்

ஆண்டுதோறும், தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2018 ம் ஆண்டிற்கான விருதை திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ளது.

விருது

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில்  தேசிய அளவில் குறைவாக உள்ள  திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்களின் பிறப்பு விகிதத்தை  உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. கருவில் உள்ள பெண் சிசுகளை கருக்கலைப்பு செய்தவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துண்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவு நடந்துவந்த குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியது, பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துரைத்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தியது.

பெண் குழந்தைகள்

பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பு இடைநிற்றலை தடுத்க நடவடிக்கை எடுத்தது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வந்தார் மாவட்ட ஆட்சியர். மேலும், ' பெண் குழந்தைகள் தங்கள் பேற்றோர்களிடம் மனம்விட்டு பேசவேண்டும் என்பதற்கு மாவட்ட முழுவதிலும் 1,94,940 மாணவிகளை பெற்றோர்களுக்கு கடிதம் எழுதவைத்தது, உயர்கல்வி படிக்க வசதியில்லாதா மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க ஏற்பாடு செய்தது, தாய் தந்தையை இழந்து கஷ்டப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்தது, 4 வயதில் அனைத்து இந்திய தலைவர்களின் பெயர்களை கூறிய பெண் குழந்தையை சந்தித்து பாராட்டியது, போன்ற பல்வேறு பாராட்டத்தக்க செயல்களை செய்துள்ளார்.

கந்தசாமி

இப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சிசு பிறப்பு விகிதம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இவற்றையெல்லாம் பாராட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகாகாந்தி மாவட்ட ஆட்சியரை பாராட்டி விருது வழங்கினார்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் பேசினோம். 'மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க செய்யவேண்டும். பெண் குழந்தைகள் கல்வியில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் பெரும்பாலானவர்கள் மேல் படிப்பிற்கு செல்ல முடிவதில்லை. காரணம், குழந்தை திருமணங்கள். தங்களுக்கு நடக்கும் குழந்தை திருமணத்தை தாங்களே தடுத்து நிறுத்தவேண்டும் என பெண் குழந்தைகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகிறேன்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க