``60 வயதில் சந்தேகம்... மனைவியைக் கொலை செய்த கணவன்!’’ - கோவையில் அதிர்ச்சி | Covai Elder Man Killed His Wife

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:11:27 (26/01/2019)

``60 வயதில் சந்தேகம்... மனைவியைக் கொலை செய்த கணவன்!’’ - கோவையில் அதிர்ச்சி

68 வயதான கணவன், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

கோவை ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கு வயது 68. இவருடைய மனைவி செல்விக்கு 60 வயது. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மொத்தம் மூன்று பிள்ளைகள். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து சத்தியமூர்த்தியும் செல்வியும் தாத்தா பாட்டி ஆகிவிட்டனர். இந்தச் சூழலில் செல்வி யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகறது. 60 வயதுகளைக் கடந்து வாழ்வின் இறுதியில் இருக்கும் சூழலில் மனைவியின் செல்போன் பேச்சில் சந்தேகமடைந்துள்ளார் சத்தியமூர்த்தி.

நேற்று காலை குளித்துவிட்டு தலை துவட்டிக்கொண்டே வந்த சத்தியமூர்த்தி, அந்தத் துண்டால் செல்வியின் கழுத்தை இறுக்கி மூச்சை திணறடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், ஆவாரம்பாளையம் வி.ஏ.ஓ-விடம் சம்பவத்தைச் சொல்லி சரணடைந்தார். இந்தத்  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பீளமேடு காவல்துறையினர், செல்வியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்தியமூர்த்தியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலம்போன கடைசியில் சந்தேகத்தின் பெயரால் நடந்த கொலை கோவை மக்களை அதிர்ச்சியடை வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க