`எடப்பாடி சத்தமாகப் பேசினால் அது அத்தனையும் பொய்தான்’ - டி.டி.வி.தினகரன் சாடல் | TTV Dhinakaran slams TN Chief minister Edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:13:00 (26/01/2019)

`எடப்பாடி சத்தமாகப் பேசினால் அது அத்தனையும் பொய்தான்’ - டி.டி.வி.தினகரன் சாடல்

எடப்பாடி பழனிசாமி சத்தமாகப் பேசினால் அது அத்தனையும் பொய்யாகத்தான் இருக்கும் என எடப்பாடியைக் கடுமையாக விமர்சனம் செய்தார் தினகரன். அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார்.

                                            

அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு சுயேச்சை வேட்பாளரான நான் வெற்றிபெற்றது மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதில், நமது வேட்பாளர் காமராஜை போட்டியிட வைத்து வெற்றிபெற்றுவிடலாம் என நினைத்த நேரத்தில், தி.மு.க தேர்தலை நிறுத்த பல வேலைகளைச் செய்தது

                                              

.பல கட்சிகளைக் கூட்டணி வைத்துக்கொண்டே தி.மு.க என்னுடன் போட்டியிட பயப்படுகிறது. எடப்பாடி அரசு எந்த மூலைக்கு அவர்கள் வெறும் வெற்றுவேட்டு. முன்பு எம்.பி-க்களுக்கு ஜெயலலிதாவிடமிருந்து உத்தரவுகள் வரும். ஆனால், தற்போது, மோடியிடமிருந்து வருகிறது. இவர்கள் கூட்டணி இல்லை என்றால் இவர்கள் மீதுள்ள வழக்குகள் தீபாவளி பட்டாசுபோல படபடவென வெளியே வரும். 

                                            

தமிழக மக்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, கட்சியினர் மக்களைச் சந்தித்து 40 பாராளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனப் பேசினார். முன்னதாக, திருச்சியிலிருந்து வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.