ஜாக்டோ - ஜியோ போராட்டம் - பள்ளி திரும்பாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு | teacher and police fight at mandapam

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:14:59 (26/01/2019)

ஜாக்டோ - ஜியோ போராட்டம் - பள்ளி திரும்பாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து 4 வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம்

 ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில், நாமக்கல்லில் நடந்த மறியல் போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட, ஜாக்டோ-ஜியோ சார்பில், நேற்று, ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் முருக செல்வராஜன், அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் பேசினர். 

``பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி - யு.கே.ஜி வகுப்புகளை ஆரம்பித்து, தொடக்கக் கல்வியில் பணிபுரியும் 2,381 இடைநிலை ஆசிரியர்களை, சமூகநலத்துறைக்கு அனுமதிப்பதை தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர், பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 1,425 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களைக் கைது செய்த போலீஸார், பரமத்தி சாலையில் உள்ள எஸ்.பி.எஸ் திருமண மண்டபம், பாவை மஹாலில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை மாலை விடுவித்த போலீஸார். 30 பேரை கைது செய்ய முயன்றனர். இதற்குப் போராட்டத்தில் ஈடுபட்டவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜாக்டோ - ஜியோ

இந்நிலையில், நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், நேற்று தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதில், `மூன்று நாள்கள் பணிக்கு வராத ஆசிரியர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்து, உடனடியாக அனுப்ப வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமையாசிரியர்கள் வேலைக்கு வராத ஆசிரியர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஜனவரி 25 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக சி.இ.ஓ உஷா தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க