`யாருக்கா இந்த அறிவாளி?’ - பா.ஜ.க தொண்டரால் டென்ஷனான உதயநிதி ஸ்டாலின்! | you don’t know the difference between administration and trustee?

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (26/01/2019)

`யாருக்கா இந்த அறிவாளி?’ - பா.ஜ.க தொண்டரால் டென்ஷனான உதயநிதி ஸ்டாலின்!

தமிழக பா.ஜ.க-வின் இளைஞர் அணியைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா என்பவர் சமீபத்தில் வாரிசு அரசியல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், ``தி.மு.க ஆதரவாளர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா, ஸ்டாலின், கனிமொழியின் வாரிசு அரசியலை மறைக்கிறார்கள். இவர்கள் வரிசையில் தமிழிசை சேரவில்லை. அவர் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்து பா.ஜ.க-வில் இணைந்தார். ஆனால், தி.மு.க, காங்கிரஸ் தலைமை வாரிசு நிறுவனமாகியுள்ளது. 

உதயநிதி

அக்கட்சிகள் ஒரு கம்பெனி’’ என்று குறிப்பிட்டதுடன், ``பா.ஜ.க-வில் வாரிசு அரசியல் இருந்தாலும் அவர்கள் எல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ-க்களாகவே இருக்கிறார்கள். தி.மு.க, காங்கிரஸ் போன்று மொத்த கட்சியையும் கட்டுப்படுத்தும் தலைவர்களாக வரவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் கட்டுப்படுத்தும் தி.மு.க அறக்கட்டளைக்கு உதயநிதி அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை நியாயப்படுத்தும் மக்களுக்கு இது புதியது’’ என்று பதிவிட்டிருந்தார்.

ஸ்டாலின்

இவரின் பதிவை டேக் செய்து, உதயநிதி ஸ்டாலின், ``நான் தி.மு.க டிரஸ்ட்டில் அறங்காவலராக இருப்பதை நிரூபித்தால் நான் பா.ஜ.க-வில் சேர்ந்துவிடுகிறேன். அதுதான் மிக மோசமான தண்டனையாக இருக்கும்’’ எனக் கலாய்த்துப் பதிவிட்டார். அவரின் பதிலைத் தொடர்ந்தும் பா.ஜ.க தொண்டர் தொடர்ந்து இதுகுறித்துக் கருத்துகள் தெரிவித்த வண்ணம் இருந்தார். அதன்படி, பவளவிழாவின்போது முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநராகக் கூறிய வீடியோவையும் உதயநிதி பேசுவதையும் பதிவிட்டார். அதில், முரசொலியில் நிர்வாக மேலாண்மை இயக்குநராக இருப்பது உண்மை என்றால் முரசொலியின் பைலா படியுங்கள் என்று உதயநிதியை அறிவுறுத்தினார்.

உதயநிதி

இதற்குப் பதிலளித்துள்ள உதயநிதி, ``சூர்யா உங்களுக்கு நிர்வாகம் மற்றும் அறங்காவலருக்கு வித்தியாசம் தெரியாதா. நீங்கள் எப்போது வந்து வேண்டுமானாலும் முரசொலியின் பைலாவை படிக்கலாம். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இனிமேல் உங்கள் கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன்’’ எனக் கூறியதுடன் பா.ஜ.க தலைவர் தமிழிசையைக் குறிப்பிட்டு, ``யாருக்கா இந்த அறிவாளி? இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியல’’ என்று பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க