திருமணம் செய்துகொண்ட கேரள நடிகை - கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் கணவர்! | Ex husband celebrates Malayalam serial actor's second marriage

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (26/01/2019)

திருமணம் செய்துகொண்ட கேரள நடிகை - கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் கணவர்!

கேரள நடிகை அம்பிளி தேவி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதைக் கொண்டாடும் விதமாக அவரின் முன்னாள் கணவர் லோவல் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகை திருமணம்

மலையாள நடிகை அம்பிளி தேவி, நடிகர்ஆதித்யன் ஜெயின் ஆகியோரின் திருமணம் கொல்லம் கொற்றங்குளங்கர தேவி கோயிலில் நேற்று நடந்தது. நடிகர் ஆதித்யன் ஜெயினுக்கு இது நான்காவது திருமணம் ஆகும். முதலில் கொல்லத்தைச் சேர்ந்த நர்ஸை திருமணம் செய்த ஆதித்யன் ஜெயின், இரண்டாவதாக மலையாள டிவி சீரியல் நடிகையைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு வருடம் டிவி நடிகையுடன் வாழ்ந்த ஆதித்யன் மூன்றாவதாகக் கண்ணூரைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்கு வாக்கு கொடுத்தார். பின்னர், திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டு காவல்நிலையம் வரை சென்றது. திருமணம் நிச்சயம் செய்தவர் பின்னர், பணம் பறித்ததாக அந்த வழக்கில் ஆதித்யன் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் புனலூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

லோயல்

இந்த நிலையில், கொல்லத்தைச் சேர்ந்த நடிகை அம்பிளி தேவியை நான்காவதாகத் திதுமணம் செய்துள்ளார் ஆதித்யன் ஜெயின். மலையாள டிவி சீரியல் ஒளிப்பதிவாளர் லோவலுக்கும் நடிகை அம்பிளி தேவிக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. நடிகர் ஆதித்யன் ஜெயினின் நான்காவது திருமணம் சர்ச்சையாகியிருக்கும் அதேசமயம் அவரை திருமணம் செய்துகொண்ட நடிகை அம்பிளி தேவியின் முதல் கணவன் லோவல் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். சீரியல் ஒளிப்பதிவு நடைபெறும் இடத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். ஆல் தி பெஸ்ட் லோவல் என எழுதப்பட்ட கேக்கை வெட்டிய லோவல் அதை சக ஊழியர்களுக்கு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். சக ஊழியர்களும் லோவலுக்கு கேக் ஊட்டி வாழ்த்து கூறினர். முன்னாள் மனைவிக்குத் திருமணம் நடந்ததை கேக் வெட்டி கொண்டாடும் கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.