`இது மனிதர்களின் அராஜகம்' - சின்னத்தம்பி இடமாற்றத்துக்காகக் கொதிக்கும் கோவை மக்கள்! | Social media talk about Coimbatore Chinnathambi elephant translocation

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (26/01/2019)

கடைசி தொடர்பு:19:49 (26/01/2019)

`இது மனிதர்களின் அராஜகம்' - சின்னத்தம்பி இடமாற்றத்துக்காகக் கொதிக்கும் கோவை மக்கள்!

கோவை சின்னத்தம்பி யானையை இடமாற்றம் செய்ததற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனப் பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.

சின்னத்தம்பி

கோவை வனப்பகுதியில் மனைவி, குட்டி என்று சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானையை, அதன் உறவுகளிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து டாப்சிலிப் வரகளியாறு பகுதியில்  இடமாற்றம் செய்துவிட்டனர். மனிதர்களை மிகவும் நம்பிய சின்னதம்பியை குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி, கயிறு  கட்டி, ஜே.சி.பி வைத்து இழுத்து, கும்கி யானைகளால் குத்தி, தந்தத்தை உடைத்து, காயங்களுடன்  வழியனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், சின்னதம்பியை இடமாற்றம் செய்ததற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

“இது கொடுமையிலும் கொடுமை. இயற்கையின் தீர்ப்பு வெகு விரைவில் வரும். அதற்காகக் காத்திருப்போம்”. “ மனிதர்கள் அராஜகம்”. “ஒருத்தனைத் தூக்கினாலும் நூறு பேர் வருவான். ஆனால், வரவன் எல்லாம் நீ இல்லையே சின்னத்தம்பி”. “ இது கொலை குற்றத்துக்கு நிகரானது”.

சின்னத்தம்பி

``நேற்று மாநகர மண்ணை விட்டு, மண்ணின் மைந்தர்களான தூய்மை தொழிலாளர்களை  வெளியேற்றினர். இன்று காடுகளின் அரசனைக் காட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். யானைகளுக்குச் சொந்தமான நிலத்தை விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. மீதமுள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று கடுமையான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன