`ஸ்டாலின் பேசிய ஆடியோ இருக்கு!' - புயலை கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் | Govt taped Stalins's conversations says Dindigul Sreenivasan

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (27/01/2019)

கடைசி தொடர்பு:07:30 (27/01/2019)

`ஸ்டாலின் பேசிய ஆடியோ இருக்கு!' - புயலை கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன்

பரபரப்பான அரசியல் பேச்சுக்களுக்கு சொந்தக்காரர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். “அப்போலோவில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்” என்றதில் இருந்து, “ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி தினகரன் திருடிக்கொண்டார்” என்றது வரை, அவரது பேச்சுக்கள் வேறு ரகத்தில் இருக்கும். இப்போது, “திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துமாறு, கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஸ்டாலின் கெஞ்சிய வீடியோ அரசாங்கத்திடம் இருக்கிறது” என்று சொல்லி, மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். 

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அ.தி.மு.க மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “தேர்தலைக் கண்டு பயமில்லை என்று சொல்லும் ஸ்டாலின் தான், திருவாரூர் இடைத்தேர்தலை திட்டமிட்டு நிறுத்தினார். அதற்காக, ‘எப்படியாவது தேர்தலை நிறுத்துங்க...’ என்று, கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஸ்டாலின் பலமுறை கெஞ்சினார். அதை அரசாங்கம் பதிவு செய்து வைத்திருக்கிறது” என்று பேசினார்.

மேலும், “சசிகலாவின் அக்கா மகன் என்பதைத்தவிர டி.டி.வி தினகரனுக்கு வேறு எந்த தகுதியும் இல்லை. சசிகாலா மூலமாக போயஸ் கார்டனுக்குள் புகுந்து பல கோடி ரூபாய் சொத்துக்களை கொள்ளையடித்தார். அதை வைத்து இப்போது அரசியல் நடத்தி வருகிறார்” என்றும் தெரிவித்தார்.