மீண்டும் டிரெண்ட் செய்யப்படும் GobackModi - எதிர்ப்பை ஈடுகொடுக்கக் களத்தில் இறங்கிய பா.ஜ.க! | #GoBackModi Trends Ahead Of PM Modi’s Tamil Nadu Visit

வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (27/01/2019)

கடைசி தொடர்பு:10:33 (27/01/2019)

மீண்டும் டிரெண்ட் செய்யப்படும் GobackModi - எதிர்ப்பை ஈடுகொடுக்கக் களத்தில் இறங்கிய பா.ஜ.க!

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார். 

மோடி

மதுரை, தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெறவுள்ளது. இதற்காகப் பாரத பிரதமர் மோடி இன்று மதுரை வருகிறார். இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பல தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவை முடித்துக்கொண்டு மதுரை ரிங் ரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 

பாரத பிரதமர் மோடி ராணுவ கண்காட்சி விழாவில் பங்கேற்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் வந்தார். அப்போது அவருக்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல இயக்கங்களும், கட்சிகளும் கறுப்புக்கொடி, பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். மேலும் GoBackModi போன்ற ஹேஷ்டேக்குகளை உலக அளவில் டிரெண்ட் செய்தனர். இதன்பிறகு தற்போது தான் அவர் தமிழகம் வருகிறார். தற்போதும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மோடியின் மதுரை வருகையை எதிர்த்து மீண்டும் ட்விட்டரில் #GoBackModi, #GoBackSadistModi போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல் இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

GobackModi

எதிர்ப்பாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பா.ஜ.கவினரும் #TNWelcomesModi, #MaduraiThanksModi என்ற ஹேஷ்டேக்களை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். ``சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தது. அப்போது தமிழகத்தை வந்து மோடி பார்க்கவில்லை. ஒரு ஆறுதல் ட்வீட் கூட மோடி போடவில்லை. இப்படி இருக்கையில் பிரசார கூட்டத்திற்காக மட்டும் தமிழகம் வருகிறார் மோடி. அவருக்குக் கண்டிப்பாக எதிர்ப்பு காட்டப்படும். சி.பி.ஐ கூடக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்கள்  பறக்கவிடப்படும்'' என ஏற்கனவே, வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மோடி வருகையின் போது மீண்டும் கறுப்புக்கொடி காட்டப்படும் என அறிவித்துள்ள நிலையில் மதுரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க