பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்! | The government has no intention of closing schools says sengottayan

வெளியிடப்பட்ட நேரம்: 09:44 (27/01/2019)

கடைசி தொடர்பு:09:44 (27/01/2019)

பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன்

பாரத சாரண- சாரணியர் இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ``ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்ப பெற வேண்டும். இந்த அரசு ஆசிரியர்களுக்கு முழு பாதுகாப்பு தரும் அரசு. ஏழை மாணவர்களின் மனநிலையை, பொதுத்தேர்வு சூழ்நிலையை கருத்தில்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நீதிமன்றங்களும் தெரிவித்துள்ளது. அதனை ஏற்று ஆசிரியர்கள் மீண்டும் தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். ஏழை - எளிய மாணவர்களின் எதிர்காலத்தைப் பிரகாசமானதாக மாற்றுவதற்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டத்தில் பல்வேறு தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பள்ளிகள் மூடப்படுகிறது என்று தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தான் 250 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 200 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 30 தொடக்கப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனவே எந்த பள்ளியையும் மூடும் நோக்கம் இந்த அரசுக்கு கிடையாது" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க