`உச்சி சூரியனே ஒண்ணும் செய்யாதபோது உதயசூரியன் என்ன செய்துவிட முடியும்’ - தமிழிசை ஆவேசம்! | Modi will become Prime Minister again says tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (27/01/2019)

கடைசி தொடர்பு:14:43 (28/01/2019)

`உச்சி சூரியனே ஒண்ணும் செய்யாதபோது உதயசூரியன் என்ன செய்துவிட முடியும்’ - தமிழிசை ஆவேசம்!

எங்களைத் தியாகம் செய்தாவது மீண்டும் மோடியைப் பிரதமர் ஆக்குவோம் எனத் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

தமிழிசை

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு அவருக்குப் பா.ஜ.க சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவப்படுத்தினர். முன்னதாக கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மோடியை வரவேற்றுப் பேசினார். அப்போது, ``மோடி பிரதமரான பின் இந்தியாவுக்கு 10 எய்ம்ஸ் கிடைத்துள்ளது. பா.ஜ.க-வின் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்கான முன்னோட்டமாக மதுரை பொதுக்கூட்டம் பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பதை இந்தக் கூட்டம் உறுதிசெய்கிறது. மதுரையில் தாமரைகள் மலர மலர உதயசூரியன் எங்களை என்ன செய்ய முடியும். லட்சக்கணக்கான தாமரைகளைப் பார்த்துப் பயந்து சூரியன் மறைந்துவிட்டது. உச்சி சூரியனே எங்களை ஒண்ணும் செய்ய முடியாதபோது உதயசூரியன் என்ன செய்துவிட முடியும்.

மோடி பிரதமரான பின் இந்தியாவுக்கு 10 எய்ம்ஸ் கிடைத்துள்ளன. இந்த ஆண்டில் மீண்டும் மோடி பிரதமராக வருவார். தியாகம் செய்தாவது மீண்டும் மோடியைப் பிரதமாக்குவோம்’’ என்று பேசியவர், பேசி முடிக்கையில் மீண்டும் மோடி; வேண்டும் மோடி என்று ஆவேசமாகப் பேசினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க