`தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை... தேசிய கீதமும் இல்லை!’ - பிரதமர் நிகழ்ச்சி சர்ச்சை | No national anthem in Madurai PM Modi function stirs controversy

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:14:32 (28/01/2019)

`தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை... தேசிய கீதமும் இல்லை!’ - பிரதமர் நிகழ்ச்சி சர்ச்சை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், மதுரை, தஞ்சை, நெல்லையில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் திறந்து வைக்கவும் இன்று காலை 11.50 மணிக்கு மண்டேலா நகரில் அமைந்துள்ள விழா மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி. 

பிரதமர் மோடி

அவருடன் மேடையில் ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.பி-க்கள் விருதுநகர் ராதாகிருஷ்ணன், மதுரை கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மட்டும் அமர்ந்திருந்தனர்.

மீனாட்சியம்மன் சிலையை முதலமைச்சர், பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், பிரதமரை வரவேற்றுப் பேசி, தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். முதலமைச்சர் எடப்பாடி பேசும்போது, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பி.ஜே.பி அரசு சுகாதாரத் துறையில் செய்துவரும் சாதனைகளைப் பற்றி பேசினார். தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசச் சென்றார். பி.ஜே.பி அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் துணை சபாநாயகர் தம்பித்துரைக்கு மேடையில் இடம் கொடுத்த போதிலும் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. அதுபோல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் இசைக்கப்படாதது எல்லோராலும் பேசப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க