`டிக்-டாக்கில் பெண்கள் பற்றி அவதூறு!’ - ஆம்பூரில் இளைஞர் கைது | Youth arrested in Ambur over defamatory remarks about women in tik tok

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:09:16 (28/01/2019)

`டிக்-டாக்கில் பெண்கள் பற்றி அவதூறு!’ - ஆம்பூரில் இளைஞர் கைது

டிக்-டாக்கில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்களை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட, ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த சின்னவரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ராஜி (22). ஷூ கம்பெனியில் வேலை செய்கிறார். இந்த இளைஞன், டிக்-டாக் செயலியில், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள், இளம்பெண்களை மிகவும் ஆபாசமாகவும் கொச்சைப்படுத்தியும் பேசியதோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. 

சம்பந்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள், இதனால் ஆத்திரமடைந்தனர். வீடியோவில் ஆபாசமாகப் பேசிய இளைஞன், ஆம்பூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்ததால், அங்குள்ள உமராபாத் போலீஸ் நிலையத்தை அச்சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று காலை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்தனர். இதையடுத்து, வீடியோ வெளியிட்ட இளைஞன் ராஜியைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.