``டெல்லியில் நான் இருக்கும்வரை நாட்டில் ஊழலை அனுமதிக்க மாட்டேன்’’ - மோடி பேச்சு! | i don't allow corruption till i am in the power says Modi in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (28/01/2019)

கடைசி தொடர்பு:08:12 (28/01/2019)

``டெல்லியில் நான் இருக்கும்வரை நாட்டில் ஊழலை அனுமதிக்க மாட்டேன்’’ - மோடி பேச்சு!

20 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானி நம்பி நாராயணனை காங்கிரஸ் தங்கள் சொந்த காரணங்களுக்காகப் பொய் வழக்கில் பலிகடாவாக்கினர். ஆனால், பா.ஜ.க. அரசு அந்த விஞ்ஞானியின் தியாகத்தை அங்கீகரித்து பத்மபூஷண் விருது அளித்து கௌரவித்துள்ளது எனத் திருச்சூரில் நடந்த பா.ஜ.க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மோடி

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பா.ஜ.க இளைஞர் அணி மாநில மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், ``சபரிமலை கோயில் விஷயம் இன்று நாடு தழுவிய அளவில் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் ஏன் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. பெண்களுக்கான ஆதவு நிலைப்பாட்டில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை. ஏனென்றால், முத்தலாக் சட்டத்துக்கு எதிராகவே அவர்கள் செயல்படுகின்றனர். அதுமட்டுமல்ல நாட்டில் நிறைய பெண் முதல்வர்கள் உண்டு. கேரளத்தில் பெண் முதல்வரைக் காட்ட முடியுமா? கம்யூனிஸ்டுக்கும் காங்கிரஸுக்கும் நாட்டின் ஜனநாயகத்தின்மீது கொஞ்சம்கூட அக்கறையில்லை. சமீபத்தில் வெளிநாட்டில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இந்தியாவின் ஜனநாயகத்தை விமர்சித்துப் பேசியதைப் பார்க்க முடிந்தது. இதற்குக் காங்கிரஸ் பதிலளிக்க வேண்டிவரும். 

நம்பி நாராயணன்

20 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானி நம்பி நாராயணனை காங்கிரஸ் தங்கள் சொந்த காரணங்களுக்காகப் பொய் வழக்கில் பலிகடாவாக்கினர். ஆனால், பா.ஜ.க அரசு அந்த விஞ்ஞானியின் தியாகத்தை அங்கீகரித்து பத்மபூஷண் விருது அளித்து கௌரவித்துள்ளது. டெல்லியில் நான் உள்ள காலம்வரை நாட்டில் ஓர் ஊழலையும் அனுமதிக்க மாட்டேன். 2021-ம் ஆண்டு குரூட் ஆயில் இறக்குமதி 10 சதவிகிதம் குறைக்கப்படும். மரபுசாரா எரிசக்தி பயன்பாடு 25 சதவிகிதம் அதிகரிக்கும். 5 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை புறந்தள்ளிய வெளிநாடுகள், தற்போது நம் நாட்டில் முதலீடுகளை அதிகரித்துள்ளன. வெளிநாட்டினர் முதலீடு விஷயத்தில் சீனாவைவிட நம் நாடு முன்னிலையில் உள்ளது" என்றார்.