`சமூக மாற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்றேன்!’ - `மிர்ச்சி’ விஜய் | mirchi vijay talks about his personal life

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (28/01/2019)

கடைசி தொடர்பு:12:05 (28/01/2019)

`சமூக மாற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்றேன்!’ - `மிர்ச்சி’ விஜய்

டி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் இது நம்மளுடைய பாதை இல்லை என அதிலிருந்து வெளியே வந்து தனக்கான களத்தை உருவாக்கி இருக்கிறார் ஆர்ஜே, `மிர்ச்சி’ விஜய். ஆர்ஜேவாக என்ட்ரி கொடுத்தவர் தற்போது விஜேவாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

மிர்ச்சி விஜய்

``ஆரம்பத்துல ஆர்ஜேவா நுழையும்போது எனக்கு என்னுடைய குரல்தான் என் பலம்னு தெரிஞ்சிகிட்டேன். அதுக்கப்புறம் கொஞ்சம், கொஞ்சமா என்னை நானே அப்டேட் பண்ணிட்டு இருந்தேன். பல விஷயங்களைப் பற்றி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். திடீர்னு வந்த விஜே வாய்ப்பை முழுமையா பயன்படுத்திக்க நினைச்சேன். இப்போ கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `டான்ஸ் Vs டான்ஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். நார்மலா எப்படி இருப்பேனோ அப்படிதான் டான்ஸ் Vs டான்ஸ் செட்டில் ஜாலியா தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். சமூகப் பிரச்னைகள் பற்றி பேசுறது நம்மளுடைய கடமை. நம்மளை சுற்றி நடக்கிற தவற்றை சுட்டிக் காட்டுறது ரொம்பவே முக்கியம்னு நினைச்சேன். அதற்காகத்தான் பட்டிமன்றங்களில் சமூகப் பிரச்னைகள் குறித்துப் பேச ஆரம்பிச்சேன். இப்போ சமூக மாற்றத்துக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்றேன்! என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோர்கிட்டேயும் நான் எதிர்பார்க்குறதும் அதுதான்!’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க