`பொன்.மாணிக்கவேல் நியமனத்தை ரத்து செய்யுங்கள்!’ - உச்ச நீதிமன்றத்தில் 66 போலீஸார் மனு! | To cancel the appointment of pon.manickavel - 66 policeman file petition in the Supreme Court

வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (28/01/2019)

கடைசி தொடர்பு:13:24 (28/01/2019)

`பொன்.மாணிக்கவேல் நியமனத்தை ரத்து செய்யுங்கள்!’ - உச்ச நீதிமன்றத்தில் 66 போலீஸார் மனு!

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து 66 போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாகச் செயல்பட்டு வந்த பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெறவிருந்தநிலையில், அவரை சிலைக் கடத்தல் சிறப்பு அதிகாரியாகப் நியமித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கறிஞர் யானை ராஜேந்திரனின் இடைமனுவில் 'பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

பொன் மாணிக்கவேல்

இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்குப் பணிநியமன உத்தரவை வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால், உயர் நீதிமன்றம் கொடுத்த பணிநீட்டிப்புச் செல்லும் என வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், சிலைக்கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவில் வேலை செய்துவந்த போலீஸ் அதிகாரிகள் `தங்களை மிரட்டி வழக்கு பதிவு செய்கிறார் பொன்.மாணிக்கவேல்' என்று காவல்துறை ஆணையரிடம் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியும் கோரிக்கை வைத்தனர்.

காவல்துறை அதிகாரிகள்

இந்தநிலையில், பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், எஸ்.பி - ஏ.டி.எஸ்.பி மட்டத்திலான 66 போலீஸ் அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளைப் பொன்.மாணிக்கவேல் தரக்குறைவாக நடத்துவதாகவும், தங்களுடைய விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாகவும் அவர்கள் மனுவில் புகார் தெரிவித்துள்ளனர். அந்தமனு இன்று விசாரணைக்கு வருகின்றது.