`போராட்டத்தில் செல்ஃபி... போக்குவரத்துக்கு நெருக்கடி!’ - மதுரை ஜாக்டோ ஜியோ போராட்டம் | Jacto - geo protest Teachers Taking Selfie in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (28/01/2019)

கடைசி தொடர்பு:17:29 (28/01/2019)

`போராட்டத்தில் செல்ஃபி... போக்குவரத்துக்கு நெருக்கடி!’ - மதுரை ஜாக்டோ ஜியோ போராட்டம்

ஜாக்டோ - ஜியோவினர் போராட்டத்துக்கு வரும் போதே அவர்களை மடக்கிக் காவல்துறையினர் கைது செய்தனர், அப்போது சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்ட பின் கைதாயினர்.

ஜாக்டோ ஜியோ

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடந்த 5 நாள்களாக ஜாக்டோ ஜியோவினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் அதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்திற்க்குக் காலை 10 மணி முதல் வந்த ஜாக்டோ ஜியோவினரை போலீஸார் வழியிேலேயே மடக்கி கைது செய்து பேருந்தில் ஏற்றினர். இதில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி வருகின்றனர். பலரும் தானாக வந்து கைதாயினர். சிலர் காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள் என்று தலை தெறிக்க ஓடினர். அப்போது கைதான சிலர் செல்பி எடுத்துக்கொண்ட பின் கைதாயினர்.

மதுரை

இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதித்தது. அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்ற நோயாளிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக வெறுப்படைந்தனர்.