குமரி கோயில்களில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்! | Rajini's daughter Soundarya visits kanniyakumari temples

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (28/01/2019)

கடைசி தொடர்பு:18:34 (28/01/2019)

குமரி கோயில்களில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

டிகர் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா, இன்று கன்னியாகுமரி பகவதி அம்மன், வேங்கடாசலபதி, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆகிய கோயில்களில் சுவாமி தரிசனம்செய்தார்.

செளந்தரியா

ரஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யாவுக்கு மறுமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்டுவருகிறது. இந்த நிலையில், அவர் பல்வேறு கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவருகிறார். செளந்தர்யா இன்று கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திர தாணுமாலய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சுசீந்தரம் கோயிலில் மூலவரான தாணுமாலைய சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகளில் நீண்டநேரம் சுவாமி தரிசனம்செய்தார்.

செளந்தரியா

பின்னர், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில், கன்னியாகுமரியில் புதிதாக அமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்த திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயில், பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பிரசித்திபெற்ற கோயில்களில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். சுசீந்திரம் கோயில் வளாகத்தில் செய்தியாளர்கள் குவிந்த நிலையில், பேட்டி அளிக்காமல் காரில் புறப்பட்டுச்சென்றார்.