நிலக்கரி இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை! | Thoothukudi VOC Chidambaranar Port achieves new height in Coal Import

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (28/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (28/01/2019)

நிலக்கரி இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், ஒரே நாளில் 59,839 மெட்ரிக் டன் அனல்மின் கரியைக் கையாண்டு, இதற்கு முந்தைய சாதனையான 51,413 மெட்ரின் டன் அனல்மின் கரியைக் கையாண்டு, புதிய சாதனை படைத்துள்ளது. 

தூத்துக்குடி துறைமுகம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களை விடவும், சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. தமிழகத்தின் கடற்கரை நுழைவு வாயிலாம் தூத்துக்குடியில் உள்ள இந்தத் துறைமுகம், கடந்த சில வருடங்களாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பல சாதனைகள் புரிந்துவருகிறது. இங்கு, கூடுதலாக 9-வது கப்பல்தளம் அமைக்கப்பட்ட பிறகு, மிகப்பெரிய கப்பல்களான 'பனாமாக்ஸ்' ரக கப்பல்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால், குறைவான காலத்தில் அதிக டன் எடைகொண்ட சரக்குகளைக் கையாண்டுவருகிறது. தற்போது, நிலக்கரியைக் கையாள்வதிலும் புதிய சாதனை படைத்துவருகிறது.

ஒரே நாளில் 59,839 மெட்ரிக் டன் அனல் மின் கரியைக் கையாண்டு, இதற்கு முந்தைய சாதனையான 51,413 மெட்ரின் டன் அனல்மின் கரியைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் வடக்கு சரக்குத்தளம் 1-ல் எம்.வி.அக்குவா நைட் என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் 59,839 மெட்ரிக் டன் அனல்மின் கரியைக் கையாண்டு, இதற்கு முந்தைய சாதனையான கடந்த 14.06.18 அன்று எம்.வி.அல்ட்ரா குஜராத் என்ற கப்பலில் இருந்து சரக்குத் தளம் 9-ல் ஒரே நாளில் கையாண்ட அளவான 51,413 மெட்ரிக் டன் அனல்மின் கரியைவிட அதிகமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு,  கடந்த 20.03.18 அன்று ஒரே நாளில் 48,701 மெட்ரிக் டன் அனல்மின் கரி கையாளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில், நெய்வேலி அனல்மின் நிலையத்திற்கான வடக்கு சரக்குத் தளத்தில் அனல்மின் கரி 3.60 மில்லியன் டன் கையாளப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், கடந்த டிசம்பர் மாதம் வரை 2.73 மில்லியன் டன் அனல்மின் கரி கையாளப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க