`சந்திரபாபு நாயுடு மாநில அநாதை, காங்கிரஸ் தேசிய அநாதை' - பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்! | central minister pon.Rathakrishnan slams congress and chandrababu naidu

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:02:14 (29/01/2019)

`சந்திரபாபு நாயுடு மாநில அநாதை, காங்கிரஸ் தேசிய அநாதை' - பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்!

தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தெளிவான முடிவில் இருக்கிறோம். சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு மாநில அநாதை காங்கிரஸ் தேசிய அநாதை என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தெளிவான முடிவில் இருக்கிறோம். சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு மாநில அநாதை காங்கிரஸ் தேசிய அநாதை என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஓட்டுநர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஓட்டுநர்கள் பங்கேற்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் கலந்துரையாடினார்கள். பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கையைச் சாதாரண மக்கள் எப்படிப் பெறமுடியும் என்கின்ற திட்டம் இந்த அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குக் குறைந்தபட்ச வருமானம் திட்டம் போன்ற திட்டங்களை காங்கிரஸ் அறிவிப்பதன் மூலம் வேறு ஏதோ குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் உள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப மாட்டார்கள். இந்த திட்டம் என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி சொல்லும் ஏமாற்று வேலை. இது காங்கிரஸ் கட்சியின் தில்லுமுல்லு அரசியல். இந்தத் திட்டம் தேர்தலுக்குக் கூட பயன்படாது. ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் மாநில அரசு அதிக கவனம் கொடுத்து வருகிறது. மேலும் கவனம் கொடுப்பார்கள் என நம்புகிறேன். போராட்டம் முடிந்து விடக் கூடாது எனச் சிலர் நினைக்கிறார்கள். அது தவறு, ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இதை அரசியல் ஆக்க வேண்டாம். இந்த தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தெளிவான முடிவில் இருக்கிறோம். சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு மாநில அநாதை காங்கிரஸ் தேசிய அநாதை" என்றார்.