“தொழில் துறையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது” - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்! | Tamil Nadu is the second state in industrial development says edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:08:43 (29/01/2019)

“தொழில் துறையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது” - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

'தொழில் துறையில், கடந்த வருடம் ஆறாவது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர்  செயின்ட்- கோபெய்ன் கண்ணாடித் தொழிற்சாலையில், 1200 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது மிதவைக் கண்ணாடி உற்பத்தி ஆலையை முதல்வர் எடப்பாடி  தொடங்கிவைத்தார். இந்த மிதவைக் கண்ணாடி உற்பத்தி ஆலையில், 72 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேகரித்துவைக்கும் மழைநீர் சேகரிப்புத்தொட்டி மற்றும் கண்ணாடி உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து சூழலையும் அ.தி.மு.க அரசு உருவாக்கியுள்ளது. இந்த வருடம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் புத்தாக்கக் கொள்கையை வெளியிட்டிருக்கிறோம். 2023-க்குள் 5000 புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தொழில் துறையில், கடந்த ஆண்டு ஆறாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது, இரண்டாம்  இடத்திற்கு முன்னேறியுள்ளது.

செயின்ட்-கோபெய்ன், எடப்பாடி பழனிசாமி

செயின்ட்-கோபெய்ன் நிறுவனம், மூன்று நூற்றாண்டிற்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறது. நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் மன்னர் முதல் பொதுமக்கள் வரை அனைவரையும் திருப்திசெய்ய விதவிதமான கண்ணாடிகளைத் தயாரித்துவருகிறது. தமிழ்நாட்டில் 3400 கோடி ரூபாய் வரை இந்த நிறுவனம் முதலீடுசெய்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை இருப்பதால், இந்த நிறுவனம் அந்தத் தடையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க