`உங்க இடம் காலி இடமாக அறிவிக்கப்படும்' - ஆசிரியர்களை மிரட்டும் தமிழக அரசு! | TN Govt warning to teachers who are participated in the strike

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (29/01/2019)

கடைசி தொடர்பு:08:30 (29/01/2019)

`உங்க இடம் காலி இடமாக அறிவிக்கப்படும்' - ஆசிரியர்களை மிரட்டும் தமிழக அரசு!

ழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் - பள்ளிக்கல்வித்துறை

போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இடைநீக்கம் செய்வது, கைதுசெய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், "காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், இன்று (29/01/2019) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களது இடம் காலியிடமாக அறிவிக்கப்படும்' என்று பள்ளிக் கல்வித்துறை இறுதிக் கெடு விதித்திருக்கிறது.

ஆசிரியர்கள் போராட்டம்

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில்,  ``நேரிலோ, தொலைபேசி , எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாகப் பணியைத் தொடரலாம். இல்லையென்றால், அவர்களது இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க