எட்டடி உயரத்தில் இருந்து தவறிவிழுந்த அர்ச்சகர் உயிரிழப்பு - நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நிகழ்ந்த சோகம்! | Temple priest died while pooja

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (29/01/2019)

கடைசி தொடர்பு:10:40 (29/01/2019)

எட்டடி உயரத்தில் இருந்து தவறிவிழுந்த அர்ச்சகர் உயிரிழப்பு - நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நிகழ்ந்த சோகம்!

நாமக்கல்லில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாக ஆஞ்சநேயர் கோயில் திகழ்ந்துவருகிறது. இங்கு, 18 அடி உயரம் கொண்ட விக்கிரகத்துக்கு  எட்டடி உயரத்தில் அர்ச்சகர்கள் நடந்துசெல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மீது நடந்து சென்றே ஆஞ்சநேயருக்கு பல்வேறு பூஜைகளை அர்ச்சகர்கள் செய்துவந்தனர்.


இதேபோல, நேற்று அர்ச்சகர் வெங்கடேஷ், பக்தர் ஒருவர் அளித்த துளசி மாலையை விக்கிரகத்துக்கு அணிவித்தார். சிறிது நேரம் நேராக நின்றுகொண்டிருந்தவர், பின்னர் நிலைதவறித் தடமாறி, எட்டடி உயரத்தில் இருந்து தலைகுப்புற விழுந்தார். 

இதில், அர்ச்சகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சக அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடனடியாக சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவர் காலமானார்.

இதுதொடர்பாக கோயில் அதிகாரிகளிடம் பேசியபோது, ``மிகப் பழைமை வாய்ந்த நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வரலாற்றில், இப்படி நடப்பது இதுவே முதல்முறை. தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றிவரும் வெங்கடேஷ், தனது சகோதரர் நாகராஜனுக்கு உதவி அர்ச்சகராகப் பணியாற்றிவந்துள்ளார்’ என்பது குறிப்பிடத்தக்கது

நீங்க எப்படி பீல் பண்றீங்க