பாண்டிச்சேரியில் கடைசி சிக்னல்... வண்டலூர் கல்குவாரியில் மிதந்த பொறியியல் மாணவரின் உடல்! | college student murdered in vandalur

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (29/01/2019)

கடைசி தொடர்பு:13:05 (29/01/2019)

பாண்டிச்சேரியில் கடைசி சிக்னல்... வண்டலூர் கல்குவாரியில் மிதந்த பொறியியல் மாணவரின் உடல்!

வண்டலூர் அடுத்துள்ள கீரப்பாக்கம் கல்குவாரியில் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில் மிதந்த அந்த உடலைக் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட கல்லூரி சரவணன், கல்குவாரி

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 22-ம் தேதி கல்லூரிக்குச் சென்றுள்ளார். கல்லூரிக்குச் சென்ற சரவணன் மாயமானதால் அவரின் பெற்றோர் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் 23-ம் தேதி புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று கல்குவாரியில் மிதந்த உடல் சரவணனாக இருக்கலாம் என்பதால் காவல்துறையினர் சரவணின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர் சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனியைச் சேர்ந்த சரவணன் என்பதும், தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

சரவணனின் பெற்றோர்கள் அதை உறுதிப்படுத்திய நிலையில் சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரவணனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு கல்குவாரியில் கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. காதல் விவகாரமா அல்லது முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா எனக் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட சரவணன்

சரவணன் காணாமல் போன புகார் கிடைத்ததையடுத்து காவல்துறையினர் சரவணனைத் தேடிவந்தனர். 23-ம் தேதி வண்டலூர் அருகே உள்ள கல்குவாரி பகுதியில் சரவணின் செல்போன் சிக்னல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் 6 மணி நேரம் கழித்து மீண்டும் பாண்டிச்சேரியில் சிக்னல் கிடைத்துள்ளது. சரவணனுக்குக் கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்து வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த தகவலின் அடிப்படையில் சரவணனின் கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுடன் இன்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்த நபரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க