ஜாமீனை ரத்துசெய்யக் கோரி வழக்கு! - மனோஜ், சயான் மீண்டும் ஆஜராக உத்தரவு | Manoj and Chayan need to be appearing again

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (29/01/2019)

கடைசி தொடர்பு:13:55 (29/01/2019)

ஜாமீனை ரத்துசெய்யக் கோரி வழக்கு! - மனோஜ், சயான் மீண்டும் ஆஜராக உத்தரவு

கொடநாடு கொலை வழக்கில் தமிழக முதல்வர்மீது கொலைப்பழி சுமத்திய சயான் மற்றும் வாளையார் மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பிப்ரவரி 2-ம் தேதி ஆஜராக நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜரான சயான், மனோஜ்

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவரும் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தமிழக முதல்வருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தமிழக அரசு, கடந்த 18-ம் தேதி, கொலை வழக்கில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சயான் மற்றும் மனோஜ்  இருவரது ஜாமீனை ரத்துசெய்யக் கோரி, உதகை அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் பாலநந்தகுமார் மனுத்தாக்கல் செய்தார்.

கடந்த 24-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சயான் மற்றும் வாளையார் மனோஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில் குமார், எங்கள் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட சம்மன், கடந்த 23-ம் தேதி கிடைத்தநிலையில், ஒரே நாளில் ஆஜராக முடியவில்லை என்ற வாதத்தை முன்வைத்ததால்,  இருவரும் வரும் 29-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக நீதிபதி வடமலை உத்தரவிட்டார். அதன்படி இருவரும் இன்று ஆஜராகினர். இதையடுத்து, பிப்ரவரி 2-ம் தேதி இருவரையும் நேரில் ஆஜராக நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

மனோஜ்- சயான்

ஏற்கெனவே, 'கொடநாடு கொலை வழக்கில் சிறப்புக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்' எனப் பல்வேறு கட்சிகள் உயர் நீதிமன்றத்தில்  கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க