`வாக்குரிமையைவிட சக்தி வாய்ந்தது ஆர்.டி.ஐ’ - கோவையில் ஒன்றுகூடிய சமூக ஆர்வலர்கள்! | RTI awarness class in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (29/01/2019)

கடைசி தொடர்பு:20:19 (29/01/2019)

`வாக்குரிமையைவிட சக்தி வாய்ந்தது ஆர்.டி.ஐ’ - கோவையில் ஒன்றுகூடிய சமூக ஆர்வலர்கள்!

கோவையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) விழிப்பு உணர்வு இயக்கத்தின், சிறப்பு பயிற்சி இன்று நடைபெற்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பாஸ்கரனின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, கோவையில் அவரது படத்திறப்பு விழா மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாகப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், சமூக ஆர்வலர்கள் ஹக்கீம், டேனியல் யேசுதாஸ், தியாகராஜன், சரவணன், முத்து குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், சட்டக் கல்லூரி மாணவர்கள், பொது மக்களும் பங்கு பெற்றனர். அவர்களுக்கு மதுரை சமூக ஆர்வலர் ஹக்கீம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பயிற்சி எடுத்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தேடலும், தீர்வும் என்ற தலைப்பில் நடந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலர்கள், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதுக்காரர்களாக இருக்கின்றனர். இது மாற வேண்டும். இளைஞர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். வாக்குரிமையைவிடச் சக்தி வாய்ந்தது, இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம். இது நம் வரிப்பணத்தில் இயங்கும் அரசாங்கம். எனவே, அரசு அவற்றை அரசு அலுவலகங்கள்தானே என்று ஒதுங்காமல், அனைத்து திட்டங்கள் தொடர்பாகவும் தெரிந்துகொள்ள முன் வர வேண்டும்” என்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.