`அன்பு, அக்கறை, அதிரடி... 'ஆபத்பாந்தவன்' ஆட்சியரால் முகம் மாறிய திருவண்ணாமலை மாவட்டம்! | Beti Bachao Beti Padao award for Tiruvannamalai

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (30/01/2019)

கடைசி தொடர்பு:15:46 (31/01/2019)

`அன்பு, அக்கறை, அதிரடி... 'ஆபத்பாந்தவன்' ஆட்சியரால் முகம் மாறிய திருவண்ணாமலை மாவட்டம்!

திருவண்ணாமலை ஆட்சியரின் நிர்வாகத்திறனால் அந்த மாவட்டம் சிறுமிகளுக்குப் பாதுகாப்பானதாக மாறியுள்ளது.

`அன்பு, அக்கறை, அதிரடி... 'ஆபத்பாந்தவன்' ஆட்சியரால் முகம் மாறிய திருவண்ணாமலை மாவட்டம்!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அறியப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தின் முகம் மாறத் தொடங்கியது. மாற்றத்துக்கு வித்திட்டவர்  மாவட்ட ஆட்சியர் கந்தசாமி!

திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகக் கந்தசாமி பொறுப்பேற்றது முதல், பெண் குழந்தைகளின் நலனில் சிரத்தை எடுக்கத் தொடங்கினார். அண்மையில், ஆரணி அருகேயுள்ள கணிக்கிழுப்பை கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற இளம் பெண்ணின் தாயார் இறந்து போனார். ஆனந்தியின் தாயார் சத்துணவு மையத்தில் சமையலராகப் பணிபுரிந்தவர். ஆனந்திக்கு ஒரு சகோதரியும், சகோதரனும் உண்டு. தாயார் இறந்ததையடுத்து ஆனந்தி தம்பி, தங்கையுடன்  தடுமாறத் தொடங்கினார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமியைச் சந்தித்து தன் நிலையைக் கூற, ஆனந்தியின் மனுவைக் கருணையுடன் பரிசீலித்தார். தொடர்ந்து ஆனந்திக்குச் சத்துணவு அமைப்பாளர் பணி கிடைக்க ஏற்பாடு செய்தார். உற்றார்- உறவினர்கள் இல்லாத அந்தப் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் வீட்டுக்கே சென்று அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வழங்கினார். ஆனந்தி மற்றும் அவரின் தம்பி தங்கையுடன்  அவர்கள் வீட்டில் தரையில் அமர்ந்து ஆட்சியர் உணவும் சாப்பிட்டார். 

பெண் குழந்தைகள் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எடுக்கும் ஸ்ட்ரிக்ட் நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்போது வெகு பிரபலம். இதனால், `எனக்குப் படிக்க ஆசை... வீட்டில் இப்போதே திருமணம் செய்து வைக்க முயல்கின்றனர்' எனப் பெற்றோர் மீது புகார் கொடுக்கும் சிறுமிகளும் அதிகரித்துள்ளனர். சமீபத்தில், 17 வயதான வித்யா என்ற சிறுமியை 25 வயது இளைஞருக்குத் திருமணம் செய்து வைக்க அவரின் தாயார் ஏற்பாடு செய்தார். தனக்கு நடக்கவிருந்த திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு வித்யா தகவல் அளித்தார். உடனடியாக களமிறங்கிய ஆட்சியர் வித்யாவுக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். வித்யாவுக்கு நர்சிங் படிக்க ஆசை. இதற்காக 3 லட்சம் ரூபாய் உடனடியாக ஏற்பாடு செய்து வித்யாவின் தாயாரிடம் வழங்கினார்.

ஆட்சியர் கந்தசாமி

இன்னோரு முறை கந்தசாமி எடுத்த அதிரடி நடவடிக்கையால் 50 சிறுமிகள், இளம் பெண்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த மாவட்டத்தில் மெர்சி அடைக்கலாபுரம் என்ற சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. 10 முதல் 22 வயது இளம்பெண்கள் வரை இங்கே தங்கியிருந்தனர். இந்தக் காப்பகத்தில் முறைகேடுகள் நடப்பதாக கந்தசாமிக்குப் புகார் வந்தது. மாவட்ட ஆட்சியரே நேரடியாகக் களம் இறங்கினார். காப்பகத்துக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினார். காப்பகத்தில் இருந்த கழிவறைகளில் கதவு கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். காப்பகம் இருந்த வளாகத்துக்குள் அதை நடத்தி வந்த லூபன் குமார் (வயது 65) மனைவி மெர்சி ஆகியோரின் வீடும் இருந்தது. விசாரணையில் லூபன் குமார் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமிகள் தங்கியிருந்த அறையில் சி.சி.டி.வியும் இருந்தது. சிறுமிகள் உடை மாற்றுவதை லூபன்குமார் கண்டு ரசித்துள்ளதும் தெரிய வந்தது. இரவு நேரத்தில் சிறுமிகளை தன் அறைக்கு அழைத்து வந்து மசாஜ் செய்யவும் வைத்துள்ளார். இப்படியெல்லாம் சிறுமிகளிடம் எல்லை மீறியுள்ளார் லூபன்குமார். 

காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். லூபன் குமாரின் மனைவி மெர்ஸி தன் சகோதரரை ஏவி அந்தச் சிறுமியை அடித்துள்ளார். இதுவெல்லாம் விசாரணையில் தெரிய வர கந்தசாமியே நேரடியாகப் புகார் அளித்து மூவரையும் போக்ஸோ சட்டத்தில் உள்ளே தள்ளினார். காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் அரசு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். புகாருக்குள்ளான காப்பகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.

 ஆட்சியர்  கந்தசாமி

பெண் குழந்தைகள் நலனில் ஆட்சியர் தனி அக்கறை காட்டியதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தேசியப் பெண் குழந்தைகள் தினத்தன்று `பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சிறந்த மாவட்டத்துக்கு விருதுகள் வழங்கி வருகிறது. 2018- ம் ஆண்டுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாவட்டத்துக்கான விருதைத் திருவண்ணாமலை பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த விருதை ஆட்சியர் கந்தசாமியிடம் வழங்கினார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்