நம் கரிசல் பூமியின் கதைக்கு மகுடம்... சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுகொண்டார் எஸ்.ராமகிருஷ்ணன்! | sramakrishnan received sahitya akademi award

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (29/01/2019)

கடைசி தொடர்பு:22:20 (29/01/2019)

நம் கரிசல் பூமியின் கதைக்கு மகுடம்... சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுகொண்டார் எஸ்.ராமகிருஷ்ணன்!

2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இன்று (29.01.2019) டெல்லியில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவ்விருதை சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர் கம்பர் வழங்கினார்.

எஸ் ராமகிருஷ்ணன்

சாகித்ய அகாடமி விருது நடுவண் அரசால் இந்திய மொழி இலக்கியங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். ஒவ்வோர் ஆண்டும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் 05.12.2018 அன்று அறிவிக்கப்பட்டன. தமிழ்மொழிப் பிரிவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய `சஞ்சாரம்’ நாவலுக்கு அவ்விருது அறிவிக்கப்பட்டது.

சஞ்சாரம் நாவல் கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாதஸ்வரக்காரர்களின் வாழ்க்கை பற்றியது. புதுடெல்லி காமனி அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர் கம்பர் அனைவருக்கும் விருதும் ஒரு லட்சம் இந்திய ரூபாய்க்கான காசோலையும் வழங்கிச் சிறப்பித்தார்.

ராமகிருஷ்ணன்

மொத்தம் 24 நபர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் ஒடியா மொழிக்குரிய விருதாளர் தவிரப் பிற அனைவரும் நேரில் வருகை தந்து பெற்றுக்கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு எனும் ஊரில் பிறந்த எஸ்.ராமகிருஷ்ணன் டெல்லியில் தன் எழுத்துக்கான இந்திய அரசின் உயர்ந்த அங்கீகாரத்தை இன்று பெற்றுள்ளார். இது அவருடைய முதலாவது சாகித்ய அகாடமி விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க