`எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்' - புகழேந்தி வலியுறுத்தல்! | Ammk Pugazhenthi slams edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:07:00 (30/01/2019)

`எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்' - புகழேந்தி வலியுறுத்தல்!

`முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஒருநாள் முழுவதும் நின்றுகொண்டு பாடம் நடத்தமுடியுமா? அவர் ஆசிரியர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்' என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

புகழேந்தி

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர், புகழேந்தி மதுரையில் செய்தியாகளை சந்தித்து பேசினார். அப்போது அவர், "ஜாக்டோ ஜியோ ஆசிரியர் போராட்டம் தீவிரமாக செல்கிறது. இந்த போராட்டத்திற்கு காராணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தானே தவிர, ஆசிரியர்களோ, அரசு ஊழியர்களோ அல்ல. முதல்வரால் காலையில் இருந்து மாலை வரை வகுப்பில் நின்று பாடம் நடத்த முடியுமா?. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேச்சால் ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர். தேர்வுகள் வருகிறது அதனால் மாணவர்கள் பாதிப்படைவார்கள். இதனால் மாணவர்கள் கூட போராட்டம் நடத்தும் நிலைக்கு  தள்ளப்படலாம். எடப்பாடி கொட நாடு பிரச்னையை திசை திருப்ப  ஆசிரியர்களை வஞ்சிக்கலாம். டாஸ்மாக் மூட சொன்னால் அரசு பள்ளிகளை மூட முயற்சி செய்கின்றனர். அம்மாவின் மரணத்தில் மர்மம் என்று ஆரம்பித்தவர் ஓ.பன்னீர் செல்வம் தான். ஆனால் விசாரணை கமிஷனில் நேரில் வந்து சொல்ல முன் வரவில்லை.

புகழேந்தி

பன்னீர் செல்வம் விசாரிக்கப்பட வேண்டியவர். அவர் ஆணையத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம். பேராசிரியர் நிர்மலாதேவி விசயத்தில் உண்மை, பொய் எதுவென்று தெரியவில்லை. அவரை பேசவைக்க வேண்டும் அவர் தரப்பு நியாயத்தையும் கேக்கவேண்டும். ஆசியர்களிடம் முதல்வரும், அமைச்சர் வீரமணியும் மன்னிப்பு கேக்கவேண்டும். தேர்தல்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் நியமிப்பதில் கோஷ்டி மோதல் தீவிரமடைந்துவருகிறது.

பாலகிருஷ்ணா ரெட்டி தொடர்பான புகாரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லாமல் தடுத்தவர் தம்பித்துரை. ஸ்டெர்லைட் மற்றும் கஜா புயலின் போது வந்து பார்வையிடாத பிரதமர் தற்போது மட்டும் மதுரையில் வந்து உரையாற்றினால், பா.ஜ.க வெற்றிப் பெற முடியுமா?மத்தியில் பி.ஜே.பி,யை விரட்டுவது தான் எங்களது முடிவு.காங்கிரஸ் கூடவும் கூட்டணி இல்லை. ஆசிரியர் போராட்டத்தில் இந்த அரசு கையலாகாத அரசாக உள்ளது, இது ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாறலாம் என்றார்.