பள்ளியில் தனி ஒருவராகக் கொடியேற்றி சல்யூட் அடித்த தலைமையாசிரியர்!- குடியரசு தினத்தில் நடந்த சுவாரஸ்யம் | Tiruppur village Government school HM hoisted national flag alone; video goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (30/01/2019)

கடைசி தொடர்பு:16:20 (30/01/2019)

பள்ளியில் தனி ஒருவராகக் கொடியேற்றி சல்யூட் அடித்த தலைமையாசிரியர்!- குடியரசு தினத்தில் நடந்த சுவாரஸ்யம்

தலைமையாசிரியர்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் கொசவம்பாளையம் கிராமத்தில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் இல்லாமல் தலைமையாசிரியர் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றி சல்யூட் அடித்துச் சென்ற சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தேசியக்கொடி ஏற்றும் தலைமையாசிரியர்

இது குறித்து கொசவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலுவிடம் கேட்டோம். ``எங்க ஊர் குக்கிராமம். 25 குழந்தைகள் படிக்கும் துவக்கப்பள்ளி இது. பெரும்பாலும் ஏழைக்குழந்தைகள்தான் இந்தப் பள்ளியில் படிக்கிறாங்க. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர்னு ஸ்கூலை மூடிட்டாங்க. ஏன்னு கேட்டா ஆசிரியர்கள் போராட்டம் பண்றாங்கன்னு பசங்க சொன்னாங்க. எப்ப ஸ்கூல் திறப்பாங்கன்னு தெரியலை.

இந்நிலையிலதான் ஜனவரி 26-ம் தேதி பள்ளித் தலைமையாசிரியர் மகேஸ்வரி பள்ளிக்கு வந்தாங்க. ஸ்கூல் திறக்க வந்தீங்களானு போய் கேட்டோம். இல்ல, இன்னிக்கு குடியரசு தினம். அதனால கொடியேற்றிப் போலாம்னு வந்தேன்னு பதில் சொன்னாங்க. அப்படீனா, நீங்க மட்டும் கொடியேற்றுங்கன்னு சொல்லிவிட்டுக் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிட்டோம். டீச்சர் மட்டும் தனியா நின்னு கொடியேற்றி சல்யூட் வெச்சிட்டுக் கிளம்பிட்டாங்க.

கொசவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலு (நடுவில் இருப்பவர்)

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பள்ளியை எடுத்து நடத்த அனுமதி கேட்டு மாவட்டக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்திருக்கோம்" என்றார்.