`அறிவொளி ஏன் குறிவைக்கப்படுகிறார்?’ - அதிரவைக்கும் பின்னணி | Background details about DPI office vigilance raid

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (30/01/2019)

கடைசி தொடர்பு:19:15 (30/01/2019)

`அறிவொளி ஏன் குறிவைக்கப்படுகிறார்?’ - அதிரவைக்கும் பின்னணி

அறிவொளியை குறி வைத்து சோதனை

மிழ்நாட்டுப் பாடநுால் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் அறிவொளியைக் குறிவைத்து தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் களம் இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாடநுால் கழகத்தின் மூலம் சிறுவர்களுக்கான இதழ் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைத் தனக்கு வேண்டிய நிறுவனத்தின் மூலம் முறைகேடாகக் கையாண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாள்களாக அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த நிலையில் அந்தத் துறையின் இயக்குநரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த லஞ்ச ஒழிப்பு சோதனைத்துறை அதிகாரிகளிடம் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அறிவொளி

இதுகுறித்து அரசுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, ``அறிவொளி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓராண்டே உள்ளது. இந்த லஞ்ச ஒழிப்பு சோதனையே அரசு தரப்பிலிருந்து கொடுக்கபட்ட அறிவுறுத்தலின் பேரில்தான் நடைபெற்றுள்ளது. முறைகேடு புகார் ஒருபுறம் இருந்தாலும், இவர் தி.மு.க-வுக்கு நெருக்கமான நபர் என்பது மற்றொரு காரணம். தி.மு.க-வுக்கு இவர் வேண்டியவராக இருந்ததை அரசு மோப்பம் பிடித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமான சில விஷயங்கள் தி.மு.க தலைமைக்குச் சென்றதன் பின்னணியில் இவர் இருந்தார் என்று அரசுக்கு சிலர் தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றுள்ளது” என்கிறார்கள்.