புதுக்கோட்டையில் பள்ளிக்கு வெளியே காத்திருந்த மாணவர்கள்! - பூட்டை உடைத்த கல்வி அலுவலர் | Students waiting outside school in Pudukottai! Chief Executive Officer who broke the lock

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (31/01/2019)

கடைசி தொடர்பு:12:36 (31/01/2019)

புதுக்கோட்டையில் பள்ளிக்கு வெளியே காத்திருந்த மாணவர்கள்! - பூட்டை உடைத்த கல்வி அலுவலர்

புதுக்கோட்டை மாவட்டம் தைலா நகரில், ஆய்வுக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பூட்டிக்கிடந்த பள்ளியின் கதவை உடைத்து, வெளியே காத்திருந்த மாணவர்களை உள்ளே அழைத்துச்சென்று, ஆசிரியர் பயிற்சி மாணவிகளைக்
கொண்டு பள்ளியைச் செயல்படவைத்தார்.

கல்வி அலுவலர்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர், போராட்டத்தை நடத்திவருகின்றனர்.  இந்நிலையில், புதுக்கோட்டை தைலா நகரில் உள்ள நடுநிலைப் பள்ளி ஆசிரியகள் வராததால், பூட்டப்பட்டிருந்தது. இது தெரியாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள், வெளியிலே நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்த நிலையில்தான், இந்தப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா  ஆய்வுக்குச் சென்றார்.

பூட்டு உடைப்பு

அப்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குநர் முன்னிலையில், கதவின் பூட்டை  உடைத்து மாணவர்களைப் பள்ளிக்குள் அனுப்பினார். உடனே ஆசிரியர் பயிற்சி மாணவிகளை  வரவழைத்து, மாணவர்களுக்குப் பாடம் நடத்த வைத்தார். இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள், முதன்மைக் கல்வி அலுவலரைப் பாராட்டினர்.