திருவண்ணாமலை அருகே நிர்வாண நிலையில் சாமியார் நடத்திய யாகம் - தடுத்து நிறுத்திய போலீஸ்! | A devotee who performed the yoga in naked at thiruvannamalai

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (31/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (31/01/2019)

திருவண்ணாமலை அருகே நிர்வாண நிலையில் சாமியார் நடத்திய யாகம் - தடுத்து நிறுத்திய போலீஸ்!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாண சாமியார் ஒருவர், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நிர்வாண நிலையில் ரகசியமாக மகா யாகம் நடத்தியது போலீஸாருக்குத் தெரியவந்து, அதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், மணக்குள விநாயகர் ஆலையம் எதிரே, ஆந்திரா பொங்குலகொண்டா கைலாயாஸ்ரம பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சூர்ய பிரகாசானந்த சரஸ்வதி சாமியார், நிர்வாண நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மகா யாகம் நடத்திவந்துள்ளார். இந்த யாகம் 7 நாள்கள் வரை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். யாகம் நடத்த 25 ஆயிரம் லிட்டர் நெய் கொண்டுவந்துள்ளனர். இந்த நிலையில், போலீஸார் அங்கு விரைந்துசென்று, யார் அனுமதியோடு இங்கு யாகம் நடத்துகிறீர்கள்? யாகம் நடத்துவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டு யாகத்தைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, யாகம் நடத்திய நிர்வாண சாமியார், பக்கத்தில் உள்ள  வாடகை அறைக்குச் சென்று விட்டார். அந்த சாமியாருடன் வந்தவர்கள் போலீஸாரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், எங்களுக்கு துணை ஜனாதிபதியைத் தெரியும். அந்த லெவல் வரை ஆட்கள் உள்ளனர். இங்கேயே இருங்கள் உங்களுக்கு கொஞ்ச நேரத்தில் போன் வரும் என்று போலீஸாரை மிரட்டினர். ஆனாலும் விடாமல், யாகத்தைத் தடுத்து நிறுத்தியது போலீஸ். 

யாகம்

எதற்காக யாகம் நடத்தினார்கள் என்று விசாரித்தபோது, உலக நன்மைக்காக சிவன் குடிகொண்டிருக்கும் ஊர்களில் யாகம் நடத்தி வருகிறோம். இதுவரை  இந்தியா முழுக்க பல இடங்களில் 224 யாகங்கள்  நடத்தியுள்ளார் என்று கூறுகின்றனர்.  இதற்கு முன்னர், இதேபோன்று தீபத்தின்போது  நிர்வாண நிலையில் ஒரு சாமியார் யாகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதை நீதிபதி மகிழேந்தி நேரில் சென்று தடுத்துநிறுத்தினார். 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அனுமதியின்றி திடீர் திடீரென்று சாமியார்கள் வந்து யாகம் நடத்துவது திருவண்ணாமலை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க