புன்சிரிப்பில் விஜயகாந்த்... கேக் ஊட்டிய பிரேமலதா... அமெரிக்காவில் நடந்த திருமண நாள் கொண்டாட்டம் | wedding anniversary celebrated vijayakanth premalatha...

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (31/01/2019)

கடைசி தொடர்பு:13:40 (31/01/2019)

புன்சிரிப்பில் விஜயகாந்த்... கேக் ஊட்டிய பிரேமலதா... அமெரிக்காவில் நடந்த திருமண நாள் கொண்டாட்டம்

 

விஜய காந்த்

 

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தே.மு.தி.க பொதுச் செயலாளர்  விஜயகாந்த், மனைவி பிரேம லதாவுடன் அங்கேயே தங்கி தொடர்ந்து சிகிச்சைபெற்றுவருகிறார். இந்த நிலையில், விஜயகாந்த்தும் அவரது மனைவி பிரேம லதாவும், தங்களின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மனைவிக்கு கேக் ஊட்டும் விஜயகாந்த்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 -ம் தேதி, இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் விஜயகாந்த். அவருடைய இந்த சிகிச்சை குறித்து அரசியல் களத்தில்  உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவர் அமெரிக்காவில் இருந்துகொண்டே கட்சிப் பணிகளைப் பார்ப்பதோடு, அவ்வப்போது தமிழகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு அறிக்கைகள் மூலமாக குரல்கொடுத்துவருகிறார். அதே போன்று, கடந்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, நண்பரின் வீட்டில் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடிய விஜயகாந்த் - பிரேமலதா தம்பதி, அந்தப்  புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். அதோடு, ட்விட்டரிலும் அங்குள்ள தட்பவெட்ப நிலைகுறித்து எழுதியதோடு, புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார் விஜயகாந்த். இந்த நிலையில், எப்படியும் பொங்கலுக்கு விஜயகாந்த் வந்துவிடுவார் என்று தே.மு.தி.க தொண்டர்கள் நம்பியிருந்தனர்.

திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்

ஆனால், அப்போதும் அவர் தமிழகம் வரவில்லை. அமெரிக்காவில் தங்கியிருக்கும் விஜயகாந்த் பிரேமலதா தம்பதி, தங்களின் 29-வது ஆண்டு திருமண நாளை இன்று கேக் வெட்டி கொண்டியுள்ளனர்.  அந்தப் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அதில், விஜயகாந்த்தின் முகத்தில் பொலிவு கூடியுள்ளது. இதனால், தே.மு.தி.க  தொண்டர்கள்  உற்சாகம் அடைந்துள்ளனர்