வெளியானது தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் - அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது தெரியுமா? #Infographics | final Voters List 2019 of tamilnadu released

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (31/01/2019)

கடைசி தொடர்பு:15:30 (31/01/2019)

வெளியானது தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் - அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது தெரியுமா? #Infographics

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தலைமைச் செயலகத்திலிருந்து இந்தப் பட்டியலை வெளியிட்டார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.91 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்

கடந்த ஆண்டு இந்தியத் தேர்தல் கமிஷன், 1.1.2019 வரை 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் தகுதி அடைந்தவர்களாக ஏற்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ளும்படி  உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அந்தப் பட்டியலில் காணப்பட்ட இரட்டைப் பெயர் பதிவு, போலி பெயர் பதிவு, இறந்தவர் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2,92,56,960 கோடி ஆண் வாக்காளர்களும், 2,98,60,765 கோடி பெண் வாக்காளர்களும், 5,472 மூன்றாம் பாலின வாக்காளர்களும் தமிழகத்தில் உள்ளனர். தமிழகத்தில், மொத்தம் 5,91,23,197 வாக்காளர்கள் இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, 2016-ம் ஆண்டு தமிழகத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5.79 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வாக்காளர்கள் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வேட்புமனு தாக்கல்செய்யும் நாள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க