`குரங்கைப் பிடித்தால்தான் வீடுகளுக்குத் திரும்புவோம்!’ - கோயிலில் தஞ்சமடைந்த நாகை கிராம மக்கள் | People's left the village because of a monkey in Nagapattinam district

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (31/01/2019)

கடைசி தொடர்பு:18:52 (31/01/2019)

`குரங்கைப் பிடித்தால்தான் வீடுகளுக்குத் திரும்புவோம்!’ - கோயிலில் தஞ்சமடைந்த நாகை கிராம மக்கள்

நாகை மாவட்டத்தில், குரங்குக்கு பயந்து ஒட்டுமொத்த கிராமமே கோயிலில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  

குரங்கு கடியால் பாதிக்கப்பட்டவர்

சீர்காழிக்கு அருகில் இருக்கிறது தென்னலக்குடி என்னும் சிறிய கிராமம். கடந்த வாரம் இந்தக் கிராமத்துக்குள் புகுந்த குரங்கு ஒன்று கண்ணில் தென்படுவோரை எல்லாம் கடித்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோரைக் கடித்திருக்கிறது. கடிபட்ட மக்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

காலில் காயம்

கடந்த சில நாள்களாக, குரங்குக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். வனத்துறையினர் எவ்வளவோ முயன்றும் அந்த ஒற்றைக் குரங்கை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், இன்று வீடுகளைவிட்டு கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். குரங்கைப் பிடித்தால்தான் வீடுகளுக்குள் வருவோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கையில் காயம்

பொதுவாக, குரங்கு கடித்தால் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்ன?

கால்நடை மருத்துவரும் முன்னாள் கால்நடைப் பராமரிப்புத்துறை இயக்குநருமான சௌந்தர பாண்டியனிடம் பேசினோம்,

``கடித்த குரங்குக்கு `ரேபிஸ்' பாதிப்பு அதாவது `வெறிநோய்' பாதிப்பு இருந்தால், கண்டிப்பாக அது கடிபட்டவர்களுக்குப் பரவும். அதனால், கடித்த இடத்தில் நன்றாகச் சோப்புப்போட்டு கழுவ வேண்டும். `ஸ்பிரிட் சொலூஷன்ஸ்' (Spirit solutions) இருந்தால் அதைப் பயன்படுத்தி அந்த இடத்தை நன்றாகத் துடைக்கலாம். அதோடு, உடனடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க