விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள விஞ்சிய பெண் வாக்காளர்கள்! | women voters excess in 7 constituency

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (31/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (31/01/2019)

விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள விஞ்சிய பெண் வாக்காளர்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகளவில் இடம் பெற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதி வாக்காளர்களுக்கான சுருக்க திருத்த பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி 159 இதரர் உட்பட 15,65,698 வேட்பாளர்கள் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, இராஜபாளையம் தொகுதியில் ஆண்கள் 1,10,941 பேர், பெண்கள் 1,16,190 பேர், இதரர் 25 பேர் என 2,27,156 பேர் உள்ளனர். திருவில்லிபுத்தூர் தொகுதியில் ஆண்கள் 1,14,736 பேர், பெண்கள் 1,19,709 பேர், இதரர் 31 என 2,34,476 பேர் உள்ளனர். சாத்தூர் தொகுதியில் ஆண்கள் 1,13,506 பேர், பெண்கள் 1,19,010 பேர், இதரர் 21 பேர் என 2,32,537 பேர் உள்ளனர். சிவகாசி தொகுதியில் ஆண்கள் 1,17,253 பேர், பெண்கள் 1,23,401 பேர், இதரர் 22 பேர் என 2,40,676 பேர் உள்ளனர். விருதுநகர் தொகுதியில் ஆண்கள் 1,02,418 பேர், பெண்கள் 1,06,281 பேர், இதரர் 34 பேர் என 2,08,733 பேர் உள்ளனர். அருப்புக்கோட்டை தொகுதியில் ஆண்கள் 1,02,916 பேர், பெண்கள் 1,08,407 பேர், இதரர் 15 பேர் என 2,11,338 பேர் உள்ளனர். திருச்சுழி தொகுதியில் ஆண்கள் 1,03,771 பேர், பெண்கள் 1,07,000 பேர், இதரர் 11 பேர் என 2,10,782 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிவகாசி தொகுதியில் அதிகபட்சமாக 2,40,676 வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் பெயர் சேர்க்கவோ, நீக்கவோ அல்லது ஏதேனும் திருத்தம் செய்ய விருப்பமுள்ள நபர்கள் 01.02.2019-ம் தேதி முதல் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.