`விலையில்லாப் பொருள்களுக்கு மதிப்பு இருக்காது!’ - அமைச்சர் பேச்சால் பரபரப்பு | Minister's controversial statement about government's freebies scheme

வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (31/01/2019)

கடைசி தொடர்பு:19:56 (31/01/2019)

`விலையில்லாப் பொருள்களுக்கு மதிப்பு இருக்காது!’ - அமைச்சர் பேச்சால் பரபரப்பு

விலையில்லா பொருள்களுக்கு மதிப்பிருக்காது என அமைச்சர் பாஸ்கரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் பாஸ்கரன்

சிவகங்கையில் கால்நடைத்துறையின் சார்பில் விலையில்லாக் கோழி வழங்கும் விழா நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராகக் காதி மற்றும் கிராமத் தொழில்கள்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறுகையில், ``சிவகங்கை மாவட்டம் கடந்த 4 ஆண்டுகளாகக் கடும் வறட்சியைச் சந்தித்து வருகிறது. வறட்சியால் விவசாயம் பார்க்க முடியாதவர்களுக்கு மாற்று வருமானத்துக்காகவே இந்த விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம். விலையில்லாப் பொருள்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பிருக்காது. எனவே, பயனாளிகள் அரசு வழங்கும் ஆடு, மாடு, கோழிகளை விற்றுவிடாதீர்கள். அதை வைத்து வருமானம் ஈட்டுங்கள்’’ என்று பேசினார்.

சிவகங்கை கால்நடை மருத்துவமனையில் கால்நடைத்துறை சார்பில் விலையில்லாக் கோழி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு வட்டாரங்களிலும் 200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 12 வட்டாரங்களில் ஒரு நபருக்கு 50 கோழிகள் வீதம் 2,400 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க