பேனர்களால் திணறும் கோவை - களமிறங்கிய டிராஃபிக் ராமசாமி! | Banner culture in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (31/01/2019)

கடைசி தொடர்பு:21:10 (31/01/2019)

பேனர்களால் திணறும் கோவை - களமிறங்கிய டிராஃபிக் ராமசாமி!

நீதிமன்றம் குட்டு வைத்தும், அரசியல் கட்சிகள் தொடங்கி கல்வி நிறுவனங்கள் வரை பேனர் கலாசாரத்தை கைவிடுவதாக இல்லை. கோவையில் ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரால் ரகு என்ற மென்பொறியாளரின் உயிர் பறிக்கப்பட்டது.

பேனர், ஃப்ளெக்ஸ் கலாசாரத்துக்கு எதிராகத் தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. இதற்கு நீதிமன்றம் குட்டு வைத்தும், அரசியல் கட்சிகள் தொடங்கி கல்வி நிறுவனங்கள் வரை பேனர் கலாசாரத்தை கைவிடுவதாக இல்லை. கோவையில் ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரால் ரகு என்ற மென்பொறியாளரின் உயிர் பறிக்கப்பட்டது.

வடவள்ளி பேனர்

ஆனால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க தொடங்கி அனைத்துக் கட்சிகளும் பேனர் கலாசாரத்தைத் தொடர்ந்து ஊக்குவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக, கோவையில் வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக அ.தி.மு.க பிரமுகர்களின் பேனர்கள், வருடம் முழுவதும் காட்சியளிக்கும். இந்நிலையில், கடந்த வாரம் கோவை வந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வடவள்ளியில் பேனர் வைக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று, போலீஸாரை சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இதனால், அங்கிருந்த பேனர்கள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து, சில நாள்கள் அமைதியாக இருந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீண்டும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகப் பேனர் வைத்தனர். இந்த விஷயம் டிராஃபிக் ராமசாமிக்குத் தெரியவே, அதிகாரிகளுக்கு மீண்டும் டோஸ் விட்டுள்ளார். இதனால், தற்போது வடவள்ளியில் பேனர் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

வடவள்ளி பேனர்

இது தொடர்பாக டிராஃபிக் ராமசாமியிடம் பேசியபோது, ``சட்ட விரோதமாகத்தான் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றமும் பலமுறை கண்டனம் தெரிவித்துவிட்டது. ஆனால், இதற்கு அதிகாரிகளே அனுமதி அளிப்பது வேதனையளிக்கிறது. கோவையில், மாநகராட்சி கமிஷனரே பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்குகிறார். இதுகுறித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன்’’ என்றார்.