``திருப்பூரிலும் மோடிக்கு கறுப்புக்கொடி'' -த.பெ.தி கழகம் அறிவிப்பு! | periyar dravidar kazhagam opposes modi's tirupur visit

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (01/02/2019)

கடைசி தொடர்பு:09:50 (01/02/2019)

``திருப்பூரிலும் மோடிக்கு கறுப்புக்கொடி'' -த.பெ.தி கழகம் அறிவிப்பு!

ராமகிருஷ்ணன்

பிரதமர் மோடி திருப்பூர் பிரசார பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, எதிர்ப்பு தெரிவித்து த.பெ.தி.க, தி.க உட்பட 60 அமைப்புகள் சார்பில் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கோவையில் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கோவையில் நேற்று காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், "பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு, கறுப்புக்கொடி காட்டப்படும்.

மோடி

தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட விடுதலைக் கழகம், திராவிடர் தமிழர் கட்சி, உள்ளிட்ட  60 அமைப்புகள் இதில் கலந்து கொள்ளும். சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை  அமல்படுத்தியதற்காகவும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியால், சிறு குறு தொழில்கள் அதளபாதத்துக்குச் சென்று விட்ட நிலையில், பிரதமர் மோடி திருப்பூருக்கு வருகைதருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்ட உள்ளோம்" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க