நேற்று தூய்மை... இன்று குப்பை..! - ஆளுநர் வருகைக்குப் பின் உதகையில் அவலம் | Governor banwarilal purohit visits ooty

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (01/02/2019)

கடைசி தொடர்பு:16:15 (01/02/2019)

நேற்று தூய்மை... இன்று குப்பை..! - ஆளுநர் வருகைக்குப் பின் உதகையில் அவலம்

ஆளுநர்

 உதகையில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் `ஐ லவ் நீலகிரி’ அதாவது அனைவரும் நீலகிரியை நேசிக்க வேண்டுமென வலியுறுத்தி உதகை மத்திய பேருந்து நிறுத்தத்தில் விழாவொன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்க, மாவட்ட முதன்மைக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு பேசினார். ஆளுநரின் வருகையையொட்டி சிறுவர்- சிறுமியர்கள் கையில் பலூன்களை ஏந்திய வண்ணம் அவரை வரவேற்றனர். இவ்விழாவில் சுகாதாரத்தை அனைவரும் பேண வேண்டும் என்ற நோக்கத்தில் `சுகாதார ரதம்’ வடிவமைக்கப்பட்டு ஆளுநரின் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது. `ஐ லவ் நீலகிரி’ என்கிற குறும்படமும் திரையிடப்பட்டது.

அவசரமாக சுத்தம்செய்யப்படும் உதகை

இறுதியாக, ஆளுநர் முன்னிலையில் கூடியிருந்த மக்கள் அனைவரும் `முன்னோடி தமிழகம்’, `முன்னோடி நீலகிரி’ என்று கோஷமிட்டு நாடு முழுவதும் தூய்மையை பேணுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டர்கள். தூய்மை காப்பதன் அடையாளமாக ஆளுநர் வருகைக்கு முன் அவசர அவசரமாகச் சுத்தம் செய்யப்பட்ட நீலகிரி தற்போது மீண்டும் தன் ‘இயல்புநிலைக்கு’ திரும்பியிருக்கிறது, குப்பைகள் சூழக் காணப்படுகிறது. முழு அளவில் திட்டங்களை மக்கள் உள்வாங்கிக்கொள்ளாத வரையில் எந்த அரசுத்திட்டங்களுக்கும் வெற்றியில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.